• Welcome to TamilsGuide
செய்திகள் 1

4 ஆவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கிழக்கு மாகாண வேலையில்லாப் பட்டதாரிகள்

இலங்கை

கிழக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் இன்று (05) நான்காவது நாளாகவும் கவனயீர்ப்புப் போராட்டத்தில்  ஈடுபட்டு வருகின்றனர்.

அரசாங்கம் அனைத்துப் பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கிழக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகளினால் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வரும்  இக்கவனயீர்ப்புப் போராட்டம் திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னாள் இன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஏனைய மாகாணங்களில் உள்ள பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படுவது போன்று கிழக்கு மாகாணத்தில் உள்ள பட்டதாரிகள் புறக்கணிக்கப்படாமல் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்  வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply