• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோனின் மெழுகு சிலை திருட்டு

பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோனின் மெழுகு சிலையை போராட்டக்காரர்கள் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனிடையே, ரஷ்யாவுடன் பிரான்ஸ் மேற்கொண்டுள்ள பொருளாதார உறவைக் கண்டித்து கிரீன்பீல் என்ற அமைப்பின் ஆதரவாளர்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

மேலும், ரஷ்யாவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை முழுமையாக துண்டிக்காத பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மெக்ரோனுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கிரெவின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோனின் மெழுகு சிலையை போராட்டக்காரர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து சென்ற பொலிஸார், சிலையை மீட்டு மீண்டும் அருங்காட்சியகத்திடம் ஒப்படைத்தனர். உக்ரைன் உடனான போருக்குப் பிறகு, ரஷ்யாவில் இருந்து பிரான்ஸ் இறக்குமதியை அதிகரித்துள்ளது.

குறிப்பாக, 2021ம் ஆண்டை காட்டிலும் 2023இல் உரங்களின் இறக்குமதி 80 சதவீதம் அதிகரித்துள்ளதாக கிரீன்பீஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.   

Leave a Reply