இந்தியாவின் சில செயல்பாடுகள் அமெரிக்காவை எரிச்சலடைய செய்கின்றன - வர்த்தக செயலாளர் ஓபன் டாக்
இந்தியாவின் நடவடிக்கைகள் அமெரிக்காவை எரிச்சலடையச் செய்துள்ளதாக அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் தெரிவித்தார்.
அமெரிக்க-இந்திய மூலோபாய கூட்டாண்மை மன்றத்தின் (USISPF) எட்டாவது கூட்டத்தில் லுட்னிக், அதிபர் டிரம்ப் இந்தியா மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார்.
இருப்பினும் ரஷியாவிடமிருந்து இராணுவ உபகரணங்களை வாங்குவது, டாலரைச் சார்ந்திருப்பதைக் குறைக்க பிரிக்ஸ் அமைப்புடன் இணைந்து செயல்படுவது போன்ற சில விஷயங்கள் அமெரிக்காவை எரிச்சலடையச் செய்ததாக தெரிவித்தார்.
அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் வெகு தொலைவில் இல்லை என்று அவர் மேலும் கூறினார்.























