லிப்ஸ்டிக் உள்ளிட்ட அழகுசாதன பொருட்களை சாப்பிட்டு வைரலான இளம் இன்ஸ்டா பிரபலம் மரணம்
அழகு சாதனப் பொருட்களை உணவாகப் சாப்பிட்டு அதை வீடியோக்களாக எடுத்து பிரபலமான தைவான் பெண் 24 வயதில் உயிரிழந்துள்ளார்.
அவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் லிப்ஸ்டிக், ப்ளஷ் மற்றும் பிற ஒப்பனைப் பொருட்களை சாப்பிடும் வீடியோக்களை தொடர்ந்து பகிர்ந்து வந்தார்.
குவா பியூட்டி' என்ற அவரது கணக்கில் 12,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள் இருந்தனர்.
ஆபத்தான இரசாயனங்கள் கொண்ட அழகுசாதனப் பொருட்களை உட்கொண்டதற்காக அவர் மீது சமூக ஊடகங்களில் நிறைய விமர்சனங்கள் எழுந்தன.























