• Welcome to TamilsGuide
செய்திகள் 1

குருந்தூர் மலை விவகாரம்- போராட்டத்தில் குதித்த யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்

இலங்கை

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்றையதினம் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

குருந்தூர் மலையில் கைது செய்யப்பட்ட விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரியே இப்  போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் “மண் துறந்த புத்தருக்கு மண் மீது ஆசையா, தொல்லியல் திணைக்களம் அரசின் கைக்கூலியா,  இந்த மண் எங்களின் சொந்தமண், பண்பாட்டு இனப்படுகொலையை நிறுத்து, குருந்தூர் மலையில் கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுதலை செய், போன்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது அப்பகுதியில் பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply