• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புதிய ஏர்பஸ் A330-200 விமானம் இலங்கையை வந்தடைந்தது

இலங்கை

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் இணையும் புதிய ஏர்பஸ் A330-200 எனும் விமானம் சற்றுமுன்னர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

இந்த விமானம் இன்று (04) காலை பிரான்சின் பாரிஸிலிருந்து இலங்கைக்கு வந்துள்ளது.

இதேவேளை, இலங்கையை உலகத்துடன் இணைக்கும் நீண்ட மற்றும் குறுகிய தூர பயணங்களுக்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸூடன் இணையும் இந்த விமானத்தின் முதல் வருகையைக் காண காலி முகத்திடலில் ஏராளமானோர் கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply