• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பென்ஸ் படத்தின் மூலம் LCU-ல் இணைந்த பிரபல மலையாள நடிகர்

சினிமா

லியோ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக பென்ஸ் என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. ராகவா லாரன்ஸ் நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு லோகேஷ் கனகராஜ் கதை எழுதியுள்ளார்.

இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் ஏற்கனவே ரெமோ, சுல்தான் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். பென்ஸ் திரைப்படம் லோகேஷ் சினிமாடிக் யூனிவெர்ஸ்-ல் ஒரு அங்கமாக உருவாகிறது.

படத்தின் இசையை இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைக்கவுள்ளார். படத்தில் நடிகர் மாதவன் , நிவின் பாலி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். படப்பிடிப்பு பணிகள் கடந்த மாதம் தொடங்கியது.

இந்நிலையில் படத்தின் வில்லன் கதாப்பாத்திரத்தை நாளை வெளியிடப்போவதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். இது நிவின் பாலியாக இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
 

Leave a Reply