• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்ட 11 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

இலங்கை

கண்டி கலஹா பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில் சேர்ந்த 11 மாணவர்கள் கடும் வெயிலில் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, ​​வெப்பத் தாக்கத்தால் (நீர்ச்சத்து குறைபாடு மற்றும் காய்ச்சல் காரணமாக கலஹா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

அதே நேரத்தில், உடல்நிலை மோசமாக இருந்த இரண்டு மாணவர்கள் பேராதனை போதனா வைத்தீயசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

11 மற்றும் 17 வயதுடைய இரண்டு மாணவர்கள் பேராதனை போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதேவேளை பல பாடசாலைகளில் விளையாட்டு மைதானங்கள் இல்லாததால், அந்த மாணவர்கள் நீண்ட தூரம் பயணம் செய்து விளையாட்டு மைதானங்கள் உள்ள இடங்களுக்கு சென்று பயிற்சி செய்துவிட்டு, பின்னர் மிகுந்த துயரத்துடன் பாடசாலைக்கு திரும்புவதையும் கிராமப்புற குழந்தைகள் சரியான காலை உணவை சாப்பிடாததும் அவர்களை பலவீனப்படுத்தியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இருப்பினும், வெப்பம் அதிகமாக இருக்கும் ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இந்த விளையாட்டு நிகழ்வுகளை நடத்துவதற்குப் பதிலாக, பொருத்தமான நேரத்தை நிர்ணயிப்பது நல்லது என்றும் அதிக வெப்பநிலைக்கு ஆளாகும் குழந்தைகளுக்கு நீரிழப்பு கூட ஏற்படலாம் என்றும், கடுமையான நோய் உயிரிழப்புக்கு கூட வழிவகுக்கும் என்றும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
 

Leave a Reply