• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யானை தாக்கியதில் இரு முதியவர்கள் மரணம்

இலங்கை

அரலகங்வில, வெஹெரகம பகுதியில் நேற்று (20) காட்டு யானை தாக்கியதில் இரு முதியவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யானை தாக்கியதில் 72 வயதான பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அவரது 75 வயதான சகோதரர் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அரலகங்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a Reply