• Welcome to TamilsGuide
செய்திகள் 1

1,700 ரூபாய் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம் -ஜீவன் தொண்டமான்

இலங்கை

”மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 33 சதவீத சம்பள உயர்வை வழங்குவதற்கே பெருந்தோட்ட கம்பனிகள் முன்வந்துள்ளமை ஏற்கமுடியாது எனவும் 1,700 ரூபா அவசியம் என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக நிற்கின்றோம் எனவும்” இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பான கலந்துரையாடலொன்று தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் தொழில் அமைச்சில் நடைபெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதில் தேசிய தொழிலாளர் சபையில் அங்கம் வகிக்கும் தொழிற்சங்கங்கள் மற்றும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் இச்சந்திப்புக்கு அழைக்கப்பட்டிருந்தன.

இதன் போது ”நாட்கூலி முறைமை பொருத்தமற்றது. நிரந்தரமானதொரு தீர்வை நோக்கி நகர வேண்டும். அந்த நிரந்தர தீர்வை அடைய காலம் எடுக்கும். அதுவரை ஆயிரம் ரூபாவிலேயே இருக்க முடியாது. அதனால்தான் 1,700 ரூபா கோருகின்றோம்” என அமைச்சர் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply