• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தமது அரசாங்கத்தில் தேயிலை உற்பத்தி அதிகரிக்கப்படும்

இலங்கை

தமது அரசாங்கத்தின் கீழ் தேயிலை உற்பத்தி விவசாயிகளுக்கு உர மானியத்தை உரிய முறையில் வழங்கவுள்ளதாகவும் அதன்மூலம் தேயிலை உற்பத்தியை அதிகரிக்கவுள்ளதாகவும்  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி – நேற்று லெல்லுப்பிட்டி ஸ்ரீ கல்யாண போதிராஜாராம விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மன்னன் சைதன்ய ஆலயத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இந்த நாட்டில் தேயிலை உற்பத்தி 35 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.

பாரிய தொழிலதிபர்களின் செல்வாக்கின் கீழ் இந்த ஆட்சி நடைபெறுகின்றது. ஊழல் மோசடிகள் மூலம் ஆயிரக்கணக்கான தலைமுறைகளாக அதிகளவான பணம் சம்பாதித்த குடும்பங்கள் நாட்டிலுள்ளன.

தோட்டத் தொழிலாளியை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளராக மாற்றுவதே எமது கட்சியின் பிரதான நோக்கம்.

தோட்டத்தொழிலாளர்களின் காணி உரிமையைக் கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை சுயசார்புடன் வழிநடத்தும் சிறிய தேயிலை தோட்ட சமூகம் உருவாக்கப்படும்.

நாட்டிற்கு டொலர்களை கொண்டு வரும் பெருந்தோட்ட சமூகம் இதுவரை தோட்டத்தொழிலாளர்களாகவே காணப்படுகின்றனர்.

நாட்டிற்கு டொலர்களை கொண்டு வரும் மலையக மக்களே பிரதான பங்கு வகிக்கின்றனர். இன்றும் எமது நாடு ஓரளவுக்கு சுவாசிக்கின்றது என்றால் பெருந்தோட்டத் துறையில் தொழிலாளர் சமூகம் செய்த தியாகமே மிகப்பெரிய வரம்” இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply