• Welcome to TamilsGuide
செய்திகள் 1

க்யூட்டான சேலையில் அபர்ணதி

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ஆர்யா, சார்பட்டா பரம்பரை படத்திற்கு பின் பெரிய வெற்றியை கொடுக்காமல் இருக்கிறார். சமீபத்தில் வெளியான எனிமி, கேப்டன், காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம் போன்ற படங்கள் பெரிய தோல்வியை சந்தித்தது.

சில ஆண்டுகளுக்கு முன் செய்து திருமணம் செய்ய எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் 18 பெண்களுடன் ரொமான்ஸ் செய்திருந்தார். ஆனால் கடைசியில் யாரையும் திருமணம் செய்து கொள்ளாதது சர்ச்சைக்குள்ளானது. அதனை தொடர்ந்து தன்னுடன் நடித்த தன்னைவிட 17 வயது குறைவான நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஒரு மகளை பெற்றெடுத்தார்.

ஆர்யாவின் நினைப்பில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்களில் ஒருவர் நடிகை அபர்ணதி. தற்போது ஒருசில படங்களில் நடித்து வரும் அபர்ணதி இன்னும் ஆர்யாவின் பெயரை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்காமல் இருந்து வருகிறார்.

ஜெயில், இருகப்பற்று உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அபர்ணதி, ஒருசில படங்களில் கமிட்டாகி இருக்கிறார். சமீபத்தில் JFW வழங்கும் விருது விழாவில் கலந்து கொண்டிருக்கிறார். இறுகப்பற்று படத்திற்கான சிறந்த நடிகைக்கான விருதினையும் பெற்றார்.

நிகழ்ச்சிக்கு க்யூட்டான சேலையில் சென்றுள்ளார். அங்கு எடுத்த சில க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து, அபர்ணதியா இது என்ற் கூறும் அளவிற்கு ஆளே மாறியிருக்கிறார்.
 

Leave a Reply