• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சீனாவிடம் பிரதமர் தினேஷ் குணவர்த்தன வேண்டுகோள்

இலங்கை

நாட்டின் தற்போதைய பொருளாதார அபிவிருத்தியில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு பூரணமான ஆதரவினை வழங்குமாறு சீனாவிலுள்ள இலங்கையர்களுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன அழைப்பு விடுத்துள்ளார்.

சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் தினேஷ் குணவர்தன பெய்ஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் விசேட சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டிருந்தார். இதன்போது  சீனாவில் வசிக்கின்ற இலங்கை தொழில் வல்லுநர்களுடன் இந்த விசேட கலந்துரையாடலிலும் ஈடுபட்டிருந்தனர்.

இக் கலந்துரையாடலின் போது கருத்துத் தெரிவித்த பிரதமர்”  வெளிநாடுகளில் உள்ள இலங்கை சமூகம் தமது தொழில் அனுபவங்களைப் எங்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும். அந்தந்த துறைகளில் உருவாக்கப்பட்ட புதுமையான வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலமும் தாய்நாட்டின் தற்போதைய பொருளாதார முன்னேற்றத்தில் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்.

எமது நாட்டிலுள்ள இலவசக் கல்வி முறை மற்றும் பிற வசதிகள் மூலம் அறிவைப் பெறுகின்ற நீங்கள் தாய்நாட்டிற்குக் கடன்பட்டிருக்கிறீர்கள். எனவே, உங்கள் தாய்நாட்டிற்கு உதவ உங்கள் தொழில்முறை திறன்களை எமக்கு வழங்குங்கள்.

நீங்கள் தத்தெடுத்த நாட்டில் உள்ள வழிகளையும் இதற்கு பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நீங்கள் இலங்கையின் அபிவிருத்தி பங்காளிகளாக இருந்து உங்கள் தாய்நாட்டின் சக குடிமக்களுக்கு உதவுவதன் மூலம் உங்கள் தொழில் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல முடியும் என நான் நம்புகின்றேன்” எனத் தெரிவித்திருந்தார்.
 

Leave a Reply