• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இந்தியன் படத்தில் மனிஷா கொய்ராலாவுக்கு பதில் முதலில் நடிக்க இருந்த டாப் ஹீரோயின் இவங்க தான்!

சினிமா

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், வெளியாகி சூப்பர்... டூப்பர்... ஹிட் அடித்த 'இந்தியன்' படத்தில் மனிஷா கொய்ராலாவுக்கு பதில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? வாங்க பார்க்கலாம்.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், கடந்த 1996-ஆம் ஆண்டு.. உலக நாயகன் கமல்ஹாசன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'இந்தியன்'. கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இப்படத்தில் அப்பா கமல்ஹாசனுக்கு ஜோடியாக சுகன்யா நடித்த நிலையில் மகன் கமல்ஹாசனுக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா நடித்திருந்தார். 

மேலும் செந்தில், கவுண்டமணி, நாசர் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்திருந்தனர்.  இந்த படத்தை ஏ. எம். ரத்னம் தயாரித்திருந்த நிலையில்... ஸ்ரீ சூர்யா மூவீஸ் வெளிவிட்டது. இப்படம் 1995-ல் வெளியான பாட்ஷா பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. அதே போல் 1977 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் மற்றும் கமல்ஹாசன் நடித்து வெளிவந்த நாம் பிறந்த மண் படத்தின் அடிப்படை கதையை ஒட்டி இப்படம் அமைந்திருந்தது.

தேசத்தில் நடக்கும் அநியாயங்களை வர்மா கலை மூலம் தட்டி கேட்கும் ஒரு சுந்தந்திர போராட்ட வீரர், தன்னுடைய மகன் செய்யும் தவறையும் தட்டி கேட்டு அவரையும் கொலை செய்துவிட்டு இந்தியன் தாத்தா தப்பிப்பது போல் முதல் பாகத்தின் கதைக்களம் இருந்தது. மேலும் இப்படம் 1996 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதின் பரிந்துரைப்பிற்காக இந்தியா சார்பில் தேர்தெடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, உலக நாயகன் தற்போது இரண்டாம் பாகத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த ஆண்டு இப்படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இயக்குனர் ஷங்கரே இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ள நிலையில், லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

சமீபத்தில் 'இந்தியன் 2' படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நடிகை காஜல் அகர்வால் கதாயானகியாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சித்தார்த், பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

இந்நிலையில் இப்படத்தின் முதல் பாகத்தில் மனிஷா கொயலாராலுக்கு பதில் நடிக்க இருந்த நடிகை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஷங்கர் இளம் வயது கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்க வைக்க முதலில் ஐஸ்வர்யா ராய்யை அணுகிய நிலையில்... அவர் அப்போது ஹிந்தி படங்களில் பிசியாக நடித்து வந்ததால், இந்த வாய்ப்பை ஏற்க முடியாமல் போனது. இதை தொடர்ந்தே... மனிஷா கொய்ராலாவை ஹீரோயினாக நடிக்க கமிட் செய்தார் ஷங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply