• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் படங்கள் என்றாலே அது சூப்பர் டூப்பர் ஹிட் ...

சினிமா

புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் படங்கள் என்றாலே அது சூப்பர் டூப்பர் ஹிட் தான் என்று கேள்விப்பட்டு இருப்போம். அவரது படங்கள் அவ்வளவு ரசனையாக இருக்கும். பாட்டு, பைட் சூப்பர் என்று அக்காலத்தில் எம்ஜிஆரின் படங்களுக்கு சுவரொட்டிகளில் போடுவார்கள். அது உண்மை தான். சண்டைக்காட்சிகளில் பிச்சி உதறுவார். அவருக்கும் சில படங்கள் தோல்வி அடைந்துள்ளன. அதுவும் பெரிய இயக்குனர்களின் படங்கள். என்னென்ன என பார்ப்போமா…

ப.நீலகண்டன் இயக்கத்தில் நல்லவன் வாழ்வான், கொடுத்து வைத்தவன், கண்ணன் என் காதலன், கணவன், நீரும் நெருப்பும், ஒரு தாய் மக்கள், சங்கே முழங்கு, ராமன் தேடிய சீதை. இவை 100 நாள்கள் ஓடவில்லை. கே.சங்கர் இயக்கத்தில் பணத்தோட்டம், கலங்கரை விளக்கம், சந்திரோதயம், உழைக்கும் கரங்கள். இவை 100 நாள்கள் ஓடவில்லை.

சாணக்கியா இயக்கிய படம் எங்க வீட்டு பிள்ளை. பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. இவரது இயக்கத்தில் நான் ஆணையிட்டால், புதிய பூமி 100 நாள்கள் ஓடவில்லை. எம்.ஏ.திருமுகம் இயக்கத்தில் தொழிலாளி, கன்னித்தாய், தனிப்பிறவி, தாய்க்குத் தலைமகன், விவசாயி, தேர்த்திருவிழா, காதல் வாகனம் ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவில் ஓடவில்லை.

சிவாஜியை வைத்து பல படங்களை இயக்கியவர் ஏ.பி.நாகராஜன். இவர் எம்ஜிஆரை வைத்து இயக்கிய ஒரே படம் நவரத்தினம். இதுவும் தோல்வியைத் தழுவியது. டி.ஆர்.ராமண்ணா இயக்கத்தில் கூண்டுக்கிளி, பாசம், பணம் படைத்தவன், பறக்கும் பாவை ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவில் ஓடவில்லை. 

எம்.கிருஷ்ணன் இயக்கத்தில் அன்னமிட்ட கை, நான் ஏன் பிறந்தேன், ஊருக்கு உழைப்பவன் ஆகிய படங்கள் 100 நாள்கள் ஓடவில்லை. பி.ஆர்.பந்துலு பல வெற்றிப்படங்களைக் கொடுத்தாலும் நாடோடி, தேடி வந்த மாப்பிள்ளை ஆகிய படங்கள் 100 நாள்கள் ஓடவில்லை.

ஏ.காசிலிங்கம் இயக்கத்தில் நாம், அரசிளங்குமரி, கலையரசி, காஞ்சித்தலைவன் படங்களும், வெற்றிப்படமான மதுரை வீரனை இயக்கிய டி.யோகானந்த் ராணி சம்யுக்தாவும் பிளாப் ஆயின.

Leave a Reply