• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தமிழ் சினிமாவில் இரட்டையர்கள்... அது இனியும் தொடருமா.. இல்லை முடிவுக்கு வருமா..

சினிமா

நியுட்டனின் மூன்றாம் விதி எல்லோருக்கும் தெரிந்தது தான்..ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர்விசை இருக்கும் .. ஒவ்வொரு ஆக்ஸனுக்கும் சமமான ரியேக்ஷன் உண்டு.. ஒவ்வொரு ஆக்ஸன் ஹீரோவுக்கும் சமமான ரியேக்ஷன் ஹீரோ உண்டு..

ஆரம்ப கால சினிமாவில் ஏற்கனவே சமூகத்தில் உலவி கொண்டு இருந்த பக்தி கதைகளையும் புராண படைப்புகளையும் படமாக்கினார்கள் அதில் நடித்தவர்களை மக்கள் வியந்து பார்த்தார்களே ஒழிய தங்களில் ஒருவராக நினைக்க வில்லை..

முதன் முதலில் ரசிகர்கள் தங்களில் ஒருவராக ஆக்ஸன் ஹீரோ எம்ஜிஆரை நினைத்தார்கள் அவருக்கு சமமான ரியேக்ஷன் ஹீரோ சிவாஜி உருவாகிவிட்டார்.. அறுபதுகளில் தொடங்கிய முதல் இரட்டையர் கலாச்சாரம் எண்பது வரை தொடர்ந்தது..

அடுத்த தலைமுறை ரஜினியை ஆக்ஸன் ஹீரோவாக ஏற்றுக்கோண்டது .. கமல் ரியேக்ஷன் ஹீரோவாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் ‌..எண்பதில் தொடங்கிய இவர்களது காலம் இரண்டாயிரம் வரை நீண்டது..

ரஜினியும் கமலும் களத்தில் இருந்த போதும்.. அடுத்த தலைமுறை ரசிகர்கள் புதிய ஆக்ஸன் ஹீரோ பதவியை விஜய்க்கு தந்தனர்.. ரியேக்ஷன் ஹீரோ பதவியை அஜீத் கைப்பற்றினார்..

இப்போது இந்த விஷயங்கள் முடிவுக்கு வரும் போல் தெரிகிறது.. ஆக்ஸன் ஹீரோ விஜய் சினிமாவை விட்டு விலகுகிறார்..

ரியேக்ஷன் ஹீரோ அஜீத் பதவி என்ன ஆகும்! காலம் பதில் சொல்லும்..

இப்போது புதிய தலைமுறை ரசிகர்கள் உருவாகி விட்டார்கள்... 

அவர்கள் யாரையும் ஆக்ஸன் ஹீரோவாக ஏற்றுக்கொள்ளவில்லை .. எனவே ரியேக்ஷன் ஹீரோவும் இப்போதைக்கு இல்லை..எனவே மலையாள படங்கள் கேப்பில் கடா வெட்டி கொண்டு இருக்கிறது..

Leave a Reply