• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கொழும்பு – கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய வருடாந்த சப்பை ரத திருவிழா

இலங்கை

கொழும்பு – கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவவத்தின் சப்பை ரத திருவிழா நடைபெறவுள்ளதுடன் நாளைய தினம் இரதோட்வசம் இடம்பெறவுள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க கொழும்பு, கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த 15 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது

9 நாட்கள் தொடர்ந்து மகோற்சவ பெருவிழா நடைபெற்றதுடன் இரதோற்சவம் நாளை இடம்பெறவுள்ளது .

நாளைய தினம் காலை 7 மணிக்கு சித்திரத்தேரில் விநாயகர் ஸ்ரீசோமஸ்கந்த மூர்த்தி அம்பாள் முருகன் சண்டேஸ்வரர் மூர்த்திகளும ஆரோகணித்து ரதோற்சவம் நடைபெறவுள்ளது

பங்குனித்திங்கள் 9 ஆம் நாளான இன்றைய தினம் மாலை 3 மணிக்கு பிரதோஷ அபிஷேகம் நடைபெற்று சப்பறத்திருவிழாவும் நடைபெறவுள்ளன

அத்துடன் பங்குனி உத்தர திருநாளான நாளை மறுதினம் ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் தேவஸ்தான மகோற்சவ பெருவிழாவின் தீர்த்தோற்சவம் இடம்பெற்று மாலை 5 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply