• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பொதுத் தேர்தலைத்தான் முதலில் நடத்த வேண்டும் -மஹிந்த ராஜபக்ஷ

இலங்கை

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

அநுராதபுரம், ஸ்ரீ மகாபோதிக்கு விஜயம் செய்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ அங்கு விசேட வழிபாடுகளில் ஈடுபட்டார். இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” நாம் எந்தவொரு தேர்தலுக்கும் தயார். எனினும், பொதுத் தேர்தலை முதலில் நடத்த வேண்டும் என்றுதான் பசில் ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார். இது நியாயமான கோரிக்கை என்றே நாம் கருதுகிறோம். ஏனெனில், ஜனாதிபதித் தேர்தல் முதலில் நடைபெற்றால், அதில் வெற்றிபெரும் எந்தவொரு தரப்பினராக இருந்தாலும், அவர்களுக்குத் தான் பொதுத் தேர்தலில் பெரும்பான்மைக் கிடைக்கும்.

இது ஏனைய கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, ஏனைய கட்சிகள் பாதிக்கப்படக்கூடாது எனில், முதலில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும். பொதுத் தேர்தலை நடத்திவிட்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வேண்டும் என்பதுதான் எமது நிலைப்பாடு” இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Leave a Reply