• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பண்டிகை காலத்தை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்தது லங்கா சதொச

இலங்கை

பண்டிகை காலத்தை முன்னிட்டு மக்களுக்கு வழங்கப்படும் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.

அதன்படி 12 பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாகவும் வாடிக்கையாளர்கள் இன்று முதல் புதிய விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என்றும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, பெரிய வெங்காயம் 100 ரூபாயினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 550 ரூபாவாகும்.

சிவப்பு கௌபி 52 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 998 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.

வெள்ளை கௌபி 50 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 1,100 ரூபாவாவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாஸ்மதி அரிசி 20 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 650 ரூபாவாகவும்.

சிவப்பு வெங்காயம் 10 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 350 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.

மேலும் வெள்ளை சீனி 5 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 265 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவப்பு சீனி 5 ரூபாயினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 425 ரூபாவாகவும் சோயா மீட் 5 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 595 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது.

சிவப்பு அரிசி 2 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 168 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, பண்டிகை காலத்தில் வழங்கப்படும் 4,500 மதிப்புள்ள மளிகைப் பொருட்கள் தற்போது 3,480 ரூபாய்க்கு அனைத்து சதொச விற்பனை நிலையங்களிலும் கொள்வனவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த பொருட்கள் பொதியில் நூடுல்ஸ் பக்கட், இடியப்ப மா, பப்படம், வினாகிரி, கிரீம் கிரேக்கர் பிஸ்கட், சோயா மீட்;, 400 கிராம் பால்மா, தேயிலை பக்கட், டின் மீன், 2 கிலோகிராம் வெள்ளை அரிசி மற்றும் 500 கிராம் பருப்பு ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளதாக சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.
 

Leave a Reply