• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கண்ணதாசன் வைத்த கடைசி கோரிக்கை... அவர் இறந்த பிறகு நிறைவேற்றிய வாலி

சினிமா

இதயத்தில் நீ படத்தில் தொடங்கி, எம்.ஜி.ஆர் சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருக்கும் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார் கவிஞர் வாலி

தமிழ் சினிமாவில் கண்ணதாசனுக்கு எதிராக பாடல் எழுத வந்தவர் வாலி என்று கூறப்பட்டு வந்தாலும் இருவருக்கும் இடையே ஆழமான நட்பு இருந்துள்ளது. இதன் காரணமாக கண்ணதாசன் வைத்த ஒரு கோரிக்கையை அவர் இறந்த பின்பு நிறைவேற்றியுள்ளார் வாலி.

தமிழ் சினிமாவில் தனது வாழ்நாளின் கடைசி வரை வாலிப கவிஞர் என்று போற்றப்பட்டவர் தான் வாலி. கவியரசர் கண்ணதாசன் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் அவருக்கு போட்டியாக வந்தவர். இருவருக்கும் இடையில் போட்டி இருந்தாலும், தனிப்பட்ட முறையில் நெருங்கிய நண்பர்களாகவும் இருந்துள்ளனர். அதேபோல் ஒரு கலக்கட்டத்தில் கண்ணதாசன் எழுத வேண்டிய ஒரு பாடல் கவிஞர் வாலிக்கு வந்தது அனைவரும் அறிந்த ஒரு தகவல்.

அதே சமயம் வாலி வாய்ப்பு தேடி அலைந்துகொண்டிருந்த காலக்கட்டத்தில் அவர், எழுத வேண்டிய ஒரு பாடலை கண்ணதாசன் எழுதியுள்ளார். சினிமாவில் வாய்ப்பு தேடிய கவிஞர் வாலி, வாய்ப்பு கிடைக்காத விரக்தியில், தனது நண்பருடன் டிவிஎஸ் கம்பெனியில் வேலைக்கு சேர மதுரை கிளம்பியுள்ளார். அப்போது கண்ணதாசன் எழுதிய ''மயக்கமா கலக்கமா'' என்ற பாடலை கேட்ட வாலி மதுரை செல்லும் எண்ணத்தை கைவிட்டு மீண்டும் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்துகொண்டு இருந்துள்ளார்.

அதன்பிறகு இதயத்தில் நீ படத்தில் தொடங்கி, எம்.ஜி.ஆர் சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருக்கும் ஹிட் பாடல்களை கொடுத்துள்ள கவிஞர் வாலி, 1968-ல் கண் மலர் என்ற படத்திற்காக ஓதுவார் என்ற பாடலை எழுதியுள்ளார், இந்த பாடல் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. அதன்பிறகு அமெரிக்கா செல்வதற்கு முன்பாக வாஹினி ஸ்டூடியோவில், கண்ணதாசன் வாலியை சந்தித்துள்ளார், அப்போது வாலி, எண்ணணே இப்போ அமெரிக்காவுக்கு நீங்கள் வரலனு யார் அழுதார் எதற்காக போறீங்க என்று கேட்டுள்ளார்.

இதை கேட்ட கண்ணதாசன் இல்லை போய்ட்டு வந்துவிடுவேன் என்று சொல்லிவிட்டு சென்ற கண்ணதாசன் அதன்பிறகு வரவே இல்லை. அதே சில வருடங்களுக்கு முன்பு ஓதுவார் பாடல் குறித்து வாலியிடம் போனில் பேசிய, கண்ணதாசன் நான் எதோ தேவாரம் திருவாசனம் என்று நினைத்தேன். இது நீ எழுதிய பாடலாமே என்று சொல்லிவிட்டு நான் இறந்தால் நீதான் பாட வேண்டும் என்று கூறியுள்ளார். 

அதேபோல் கண்ணதாசன் இறந்து 3-வது நாள் நடந்த இரங்கல் கூட்டத்தில் பேசிய வாலி, எழுத படிக்க தெரியாத எத்தனையோ பேர்களில் எமனும் ஒருவன் அழகிய கவிதை புத்தகத்தை கழித்து போட்டுவிட்டான் என்று கவிதை பாடியுள்ளார். இதை வாலியே ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply