• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தமிழகத்தில் டப்பிங் இல்லாமல் ரூ.50 கோடி வசூல் மஞ்சுமேல் பாய்ஸ்!

சினிமா

உலக அளவில் ரூ.200 கோடி வசூலை நெருங்கும் மஞ்சுமேல் பாய்ஸ்; தமிழகத்தில் டப்பிங் இல்லாமல் ரூ.50 கோடி வசூல்!

மஞ்சும்மேல் பாய்ஸ் படம் டப்பிங் செய்யாமல் தமிழ்நாட்டில் ரூ.50 கோடி வசூல் செய்த முதல் தமிழ் மொழி அல்லாத திரைப்படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.

மஞ்சுமேல் பாய்ஸ் படம் பாக்ஸ் ஆஃபீஸ் வசூலில் உலக அளவில் ரூ.200 கோடியை நெருங்கி வருகிறது, அதே நேரத்தில், டப்பிங் பதிப்பு இல்லாமல், தமிழ்நாட்டில் ரூ.50 கோடி வசூல் செய்த முதல் தமிழ் மொழி அல்லாத திரைப்படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.

இந்த படம் 2018-ம் ஆண்டு சாதனையை 21 நாட்களில் கடந்துவிட்டதால், உலக அளவில் ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாளப் படமாக மஞ்சுமெல் பாய்ஸ் மாறும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

ஜூட் அந்தனி ஜோசப்பின் 2018- எல்லோரும் ஒரு ஹீரோ,(Everyone is a Hero) என்ற படம் உலக அளவில் ரூ.175 கோடி வசூலித்து, எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த மலையாளப் படமாக உருவெடுத்தபோது, 2016-ல் இயக்குநர் வைசாக்கின் மோகன்லால் நடித்த புலிமுருகன் ரூ.139 கோடிக்கு மேல் வசூலித்த 7 ஆண்டு கால சாதனையை முடிவுக்குக் கொண்டு வந்தது. இருப்பினும், 2018-ன் சாதனை குறுகிய காலமே இருந்தது. மற்றொரு சர்வைவல் வகை படமான இயக்குனர் சிதம்பரத்தின் மஞ்சும்மேல் பாய்ஸ், சமீபத்தில் அதை முறியடித்து முதலிடத்தைப் பிடித்தது.

இந்த படம் 21 நாட்களில் உலகம் முழுவதும் வசூலில் ரூ.176 கோடியை தாண்டியதால், மஞ்சுமேல் பாய்ஸ் மற்றொரு மைல்கல்லை அமைத்து, உலக அளவில் ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாளப் படமாக மாறும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. கியூ ஸ்டுடியோவின் கருத்துப்படி, புலிமுருகனின் ரூ 139.5 கோடி வசூலை மஞ்சுமெல் பாய்ஸ் வெறும் 17 நாட்களில் முந்தியது மற்றும் 2018-ன் மொத்த வசூலான ரூ 175.6 கோடியை வெள்ளிக்கிழமை தாண்டியது.

தற்போது, மஞ்சுமேல் பாய்ஸ் படத்தின் வசூல், ஞாயிற்றுக்கிழமை மதியம் வரையிலான நிலவரப்படி, 180 கோடியைத் தொட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இண்டஸ்ட்ரி டிராக்கர் ஏபி ஜார்ஜ் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிடுள்ளார், “இதுவரை மஞ்சுமேல் பாய்ஸ் உலக அளவில் மொத்த வசூல் — 180 கோடிக்கு மேல் பெற்றுள்ளது. இதுதான் ஆல் டைம் பிளாக்பஸ்டர்.” என்று குறிப்பிட்டுள்ளார். மறுபுறம், பொழுதுபோக்கு துறை நிபுணர் ரமேஷ் பாலா சமீபத்தில் அறிவித்தார். தமிழ் மொழிமாற்றம் செய்யப்படாமல், தமிழ்நாட்டில் ரூ.50 கோடி வசூல் செய்த முதல் தமிழ் அல்லாத இந்தியத் திரைப்படம் என்ற சாதனையைப் படைத்தது.

இண்டஸ்ட்ரி டிராக்கர் சாக்னில்க்கின் கருத்துப்படி, பிப்ரவரி 22-ம் தேதி வெளியான இப்படம், சனிக்கிழமை திரையரங்குகளில் 24 வது நாளில் ரூ 3.85 கோடி இந்திய அளவில் நிகர வசூலை எட்டியது. மூன்று வாரங்கள் ஓடிய போதிலும், இந்த படம் தொடர்ந்து வலுவான வார பாக்ஸ் ஆபிஸ் வசூலைக் காண்கிறது என்று குறிப்பிட்டுள்ளது.

சனிக்கிழமையன்று, மலையாள மார்க்கெட்டில், இந்த படம் 38.57 சதவிகிதம் மொத்த வசூலைக் கண்டது. காலைக் காட்சிகளில் 25.38 சதவிகிதம் ஆக்கிரமிப்பு இருந்தபோதும், இந்த எண்ணிக்கை நாள் முழுவதும் அதிகரித்து, மதியம் 34.56 சதவிகிதமாகவும், மாலைக் காட்சிகளின் போது 44.30 சதவிகிதமாகவும், இரவுக் காட்சிகளின் போது 50.02 சதவிகிதமாகவும் உயர்ந்தது.

கேரளாவில், மஞ்சுமேல் பாய்ஸ் படம் கடந்த சனிக்கிழமை மட்டும் ரூ. 1.10 கோடியை வசூலித்துள்ளது. உள்ளூர் இண்டஸ்ட்ரி டிராக்கர் வாட் தி ஃபஸ் அறிக்கையின்படி, 807 ஷோக்களில் 70,190 பார்வையாளர்களுடன் ஒட்டுமொத்தமாக 30.16 சதவீத ஆக்கிரமிப்பு விகிதத்தை அடைந்துள்ளது.

சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ், கணபதி மற்றும் ஜீன் பால் லால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், மஞ்சுமேல் பாய்ஸ் வெளியானதும் அமோக வரவேற்பைப் பெற்றது. இந்த திரைப்படத்தின் விமர்சனத்தில், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டது,  “சிதம்பரத்தின் சர்வைவல் த்ரில்லர் நம்பிக்கை, பின்னடைவு மற்றும் விடாமுயற்சி பற்றியது, மேலும் இது ஒரு உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது என்பது இன்னும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.”
 

Leave a Reply