• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அதிகரித்து வரும் வெப்பநிலையால் ஆபத்தான நிலையில் 18 நீர்த்தேக்கங்கள்

இலங்கை

நாட்டில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக 18 நீர்த்தேக்கங்கள் தற்போது ஆபத்தான நிலையில் காணப்படுவதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்த நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் அனோஜா களுஆராச்சி, நாட்டின் பல பகுதிகளில் நிலவும் வரட்சியான காலநிலைக் காரணமாக அத்தியாவசியமற்ற தேவைகளுக்கு நீரை பயன்படுத்த வேண்டாம் என மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை வாத்துவை, எஹெலியகொட மற்றும் ரதம்பல பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தற்போது குறைந்த அழுத்தத்தில் விநியோகிக்கப்படுவதால், அந்த பகுதிகளுக்கு பவுசர்கள் மூலம் நீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

மேலும், நாட்டில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக 18 நீர்த்தேக்கங்கள் தற்போது ஆபத்தான நிலையில் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply