• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தமிழே தெரியாத ஒருவர் தமிழ் படங்களை இயக்கி வெற்றியும் பெற்றிருக்கிறார்

சினிமா

தமிழ் சினிமாவில் தமிழ் தெரியாத நடிகைகள் இருக்கலாம் ஆனால் தமிழ்த் திரையுலக வரலாற்றில் தமிழே தெரியாத ஒருவர் தமிழ் படங்களை இயக்கி வெற்றியும் பெற்றிருக்கிறார் என்றால் அவர்தான் எல்லீஸ் ஆர் டங்கன்.எல்லீஸ்.ஆர்.டங்கனுக்கு தமிழில் மருந்துக்குக் கூட ஒரு வார்த்தையும் தெரியாது. அந்த நிலையிலும் ஆங்கிலம் தெரிந்த தன்னுடைய உதவியாளர்களை வைத்து தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி வெற்றிகரமான இயக்குநராக வலம் வந்தார்.முதல் சூப்பர் ஸ்டாராக விளங்கிய எம்கே தியாகராஜ பாகவதரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றவர், டங்கன் தான். அவர் இயக்கிய அம்பிகாபதி படம் 1940 ஆண்டுகளில் மிகவும் வெற்றிகரமான படமாகத் திகழ்ந்தது அனைவரின் பாராட்டையும் பெற்ற திரைப்படம் அம்பிகாபதி .அம்பிகாபதி திரையிட்டவுடன் பாகவதரின் படம் அலங்கரிக்கப்டாத வீடுகளே தென்னாட்டில் இல்லை என்று சொல்லாம்.

காதலனும் காதலியும் சந்தித்துப் பேசும் காட்சிகளில் அதற்கு முன் தமிழ் சினிமா பார்த்திராத குளோஸ்- அப் காட்சிகளை முதல் முறையாகப் பயன்படுத்தினார் இயக்குநர். வானில் நிலவு ரம்மியமாக எரிந்துகொண்டிருக்க முதல் முறையாக அம்பிகாபதியும் அமராவதியும் ஏரிக்கரையில் சந்தித்துக் காதலைக் கொண்டாடும் பாடல் முழுவதையும் க்ளோஸ் அப்பில் கொண்டாடியிருப்பார். அவர்கள் கன்னத்துடன் கன்னம் வைத்துக் காதலில் மருகும் காட்சியும் அதுவே முதல் முறை. எம்.கே.தியாகராஜ பாகவதர், எம்.ஆர்.சந்தானலட்சுமி நெருக்கமான காட்சியை படமாக்கும் இயக்குனர் எல்லிஸ் ஆர் . டங்கன்
 

Leave a Reply