• Welcome to TamilsGuide
செய்திகள் 1

 நடிகர் விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒருமாதிரி நடந்துக்கொள்வார். 

சினிமா

நடிகர் விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒருமாதிரி நடந்துக்கொள்வார். கேமரா ஆன் ஆகிவிட்டால் ஆளே மாறிவிடுவார். அவரால் நாங்க தான் அழுகணும் எனவும் நடிகர் ஸ்ரீகாந்த் சொல்லி இருக்கும் தகவல்கள் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியது.

ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா ஆகியோர் இணைந்து நடித்த திரைப்படம் நண்பன். இப்படத்திற்கு ஹரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்தார். இந்தி 3 இடியட்ஸ் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக உருவாக்கிய இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 

முதல்முறையாக விஜயுடன் ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் இணைந்து நடித்தனர். அந்த அனுபவம் குறித்து ஸ்ரீகாந்த் ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். அப்பேட்டியில் இருந்து, நானும் ஜீவாவும் டான்ஸ் ஸ்டப்புக்களை ஒரு மணி நேரமாக ப்ராக்டீஸ் செய்துக்கொண்டு இருப்போம்.

விஜய் சார் அப்போ வருவார். இரண்டு நிமிஷம் பார்த்துவிட்டு டேக் போகலாம் எனக் கூறிவிடுவார். புரியுதா சார் எனக் கேட்டால் எனக்கே தெரியலை எனச் சொல்லிக்கொண்டே பிச்சு உதறிவிடுவார். எங்களுக்கு ஷாக் ஆகிவிடும். சில டைம் இவ்வளோ பெரிய ஸ்டப்பா? என ஷாக் ஆகி கேட்பார்.

கட் பண்ணி எடுத்துக்கலாமா எனக் கேட்பார். எனக்கும், ஜீவாவுக்கும் சந்தோஷமாகி விடும். இப்போதான் நம்ம ரூட்டுக்கு வந்து இருக்கார் என போட்டுக்கொள்வோம். ஆனால் கேமரா முன்னாடி ஒருமாதிரி இருப்பார். மானிட்டரில் ஒரு மாதிரி ஆடுவார். நாங்க என்ன நடிகருடா இவரு என நினைத்து கொள்வோம்.

எங்களை பார்த்து கொஞ்சம் குறைச்சு ஆடுங்க. என்னால முடியாது எனச் சொல்வார். ஆனால் கேமராவில் அடித்து தூள் கிளப்புவார். அவர் மட்டுமே தெரிவார். வேறு யாருமே தெரியமாட்டார்கள். ஒருக்கட்டத்தில் எங்களுக்கு தான் டான்ஸ்களை முடிப்பதற்குள் அழுகையே வந்துவிட்டதாகவும் தெரிவித்து இருக்கிறார்.
 

Leave a Reply