• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கொழும்பின் கால்வாய் அமைப்புக்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

இலங்கை

கொழும்பு நகரப் வலயத்திலும் அதனைச் சுற்றியுள்ள பிரதான கால்வாய் அமைப்புக்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொழும்பிலும் அதனைச் சூழவுள்ள பல ஏரிகள் மற்றும் கால்வாய்கள் சுகாதார பொருட்கள், கழிவுநீர் மற்றும் எண்ணெய் போன்ற கழிவுகளால் நிரம்பியுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதனால், மிகக்குறைந்த மழையின் போதும் கொழும்பில் பிரதான வீதிகள் வெள்ளத்தில் மூழ்குவதற்கு இதுவே பிரதான காரணம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு நகரப் வலயத்திலும் அதனைச் சுற்றியுள்ள பிரதான கால்வாய் அமைப்பு 44 கி.மீ. ஆகும். இரண்டாம் கால்வாயின் நீளம் 52 கி.மீ. இந்த கால்வாய் சீரமைப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

வெள்ளத்தை கட்டுப்படுத்தவும் கொழும்பு நகரையும் அதனை சூழவுள்ள பகுதிகளையும் சுத்தமாகவும் அழகாகவும் வைத்திருக்க இந்த கால்வாய்கள் மற்றும் குளங்களை தொடர்ந்து சுத்தம் செய்ய வேண்டும் எனவும் இதற்கு பொது மக்களின் முழு ஆதரவையும் எதிர்பார்க்கிறோம் எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த ஏரிகள் மற்றும் கால்வாய்களை புனரமைக்கும் போது அவற்றினைச் சேதப்படுத்தாமல், அவற்றில் வாழும் நீர்வாழ் உயிரினங்களை பாதுகாக்கும் சுற்றுச்சூழலுக்கு உகந்த செடிகளை அகற்றாமல் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply