• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கலாசார பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் – விதுர

இலங்கை

புத்த சாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, உடரட ஆடையை உலக பாரம்பரியமாக மாற்றுவதில் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் கலாசார பாரம்பரியத்தை எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

அதன்படி இலங்கையில் இதுவரை எட்டு இடங்கள் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களாக பாதுகாக்கப்பட்டுள்ளன.

இன்னிலையில் இந்த உலக பாரம்பரிய தளங்களில் சிகிரியா, பொலன்னறுவை, ரங்கிரி தம்புலு கோவில், காலி கோட்டை, சிங்கராஜா வனப்பகுதி, அனுராதபுர பூஜா நகரம், கண்டி தலந்தா அரண்மனை மற்றும் ஹார்டன் சமவெளி மற்றும் நக்கிள்ஸ் மலைத்தொடரை உள்ளடக்கிய நாட்டின் மத்திய மலைப்பகுதிகள் ஆகியவை உள்ளடங்குகின்றன.

மேலும் நாட்டின் கலாசார பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல கலாசார தேவை எழுந்துள்ளதாகவும், அதற்காக நாட்டின் அனைத்து கலைஞர்களும் ஒன்று திரள வேண்டியது அவசியம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
 

Leave a Reply