• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று திரைக்கு வருகிறது டக் டிக் டோஸ்

இலங்கை

ஈழத்தில் உருவாகியுள்ள “டக் டிக் டோஸ்” திரைப்படம் ரசிகர்களின் பலத்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் இன்று  யாழ்ப்பாணத்தில் திரையிடப்படவுள்ளது.

அந்தவகையில் குறித்த திரைப்படமானது  இன்று யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கிலும், பருத்தித்துறை SS திரையரங்கிலும், சாவகச்சேரி பாலா திரையரங்கிலும் வெளியிடப்படவுள்ளதோடு எதிர்வரும் 15ஆம் திகதி இலங்கையின் ஏனைய பாகங்களில் உள்ள திரையரங்குகளிலும்  திரைப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை கனடாவில் எதிர்வரும் 09ஆம் திகதி Scarborough City, Woodside Cinemas மதியம் 01மணிக்கும், 10ஆம் திகதி சுவிஸ் Liestal மாநிலத்தில் உள்ள KINOORIS திரையரங்கில் காலை 11.30 மணிக்கு திரைப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈழத்து இளைஞர்களால் தயாரிக்கப்பட்டு பெரும் வெற்றி பெற்ற “புத்தி கெட்ட மனிதரெல்லாம்” திரைப்படத்தினை தொடர்ந்து, அந்த படத்தின் இயக்குனர் ராஜ் சிவராஜ் இயக்கத்தில் “டக் டிக் டோஸ்” எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளமையால் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரைப்படம் திரைக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply