• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தங்கத்தில் குளித்த உலகின் முதல் பில்லியனர்! மஸ்க், 

வரலாற்றில் பணக்காரர்கள் பலர் இருந்திருக்கலாம். ஆனால், 14ம் நூற்றாண்டில் ஆப்பிரிக்காவில் ஆட்சி செய்த மன்னர் மான்சா மூசாவை விஞ்ச யாரும் இல்லை என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். அந்த அளவிற்கு மான்சா மூசாவின் செல்வம் கணக்கிட முடியாத அளவில் இருந்தது.

மான்சா மூசா யார்?

மான்சா மூசா(Mansa Musa), மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்த Mali பேரரசின் மன்னராக 1312 முதல் 1337 வரை ஆட்சி செய்தார்.

 இவரது பேரரசு தங்கம்(Gold flowed from mines) மற்றும் உப்பின் வணிகத்தில் முதலிடம் வகித்தது. இதன் காரணமாக, மான்சா மூசாவின் கஜானா தங்கக் காசுகளால் நிரம்பியிருந்தது.

மான்சா மூசாவின் செல்வத்தை இன்றைய கால மதிப்பில் கணக்கிடுவது கடினம் என்றாலும், அவர் மிகப் பெரிய பணக்காரராக இருந்திருக்க வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

 சில இணையதள கட்டுரைகள் சில அவரது சொத்து மதிப்பு 400 பில்லியன் டாலர் என்று குறிப்பிடுகின்றன. இது உண்மையாக இருந்தால், அவரை உலகின் முதல் பில்லியனர் என்று கூட சொல்லலாம்!

மேலும் தற்போது உலகின் மிகப்பெரிய பணக்காரர்களாக விளங்கும் 195.8 billion டொலர் சொத்து மதிப்பு Jeff Bezos,  194.6 billion டொலர் சொத்து மதிப்பு இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் Mukesh Ambani, 117.8 billion டொலர் சொத்து மதிப்பு உள்ள Gautam Adani இவர்களை விடவும் மிகப் பெரிய பணக்காரராக பேரரசர் மான்சா மூசா இருந்துள்ளார்.

மான்சா மூசா தனது செல்வத்தை மட்டும் குவித்து வைக்கவில்லை.  தனது பக்தியையும் காட்டும் விதமாக 1324 ஆம் ஆண்டு மெக்காவுக்கு ஹஜ் யாத்திரை சென்றார். அவரது யாத்திரை மிகவும் பிரமாண்டமாக இருந்தது.

  நூற்றுக்கணக்கான ஒட்டகங்கள்,  தொன்னையக்கணக்கான தங்கக் காசுகள்,  பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள்  என்று அவரது யாத்திரை எல்லோரையும் பிரமிக்க வைத்தது.
 

Leave a Reply