• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பாக்யராஜ் மீது இளையராஜாவுக்கு அவ்ளோ கோபம்!

சினிமா

பாக்யராஜ், 1981-ம் ஆண்டு தான் இயக்கிய 4-வது படமான இன்றுபோய் நாளை வா படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றினார்.

தமிழ் சினிமாவின் வித்தியாசமான இயக்குனர் என்று பெயரேடுத்துள்ள பார்த்திபன் தான் இயக்கிய முதல் படத்திற்கு இளையாராஜா தான் இசையமைக்க வேண்டும் என்று விரும்பி அவரிம் கேட்டபோது, பாக்யராஜ் மீதுள்ள கோபத்தில் இசையமைக்க மறுத்துள்ளார்.

இந்தி சினிமாவில் திரைக்கதை மன்னன் என்று பெயரெடுத்தவர் கே.பாக்யராஜ். பாரதிராஜாவின் முதல் படமாக 16 வயதினிலே படத்தின் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர், புதிய வார்ப்புகள் படத்தில் நாயகனாக நடித்திருந்தார். 1979-ம் ஆண்டு வெளியான சுவரில்லாத சித்திரங்கள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் பாக்யராஜ்.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், அடுத்து, ஒரு கை ஓசை, மௌனகீதங்கள, இன்றுபோய் நாளை வா, அந்த 7 நாட்கள், தாவணி கனவுகள் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். இவரின் முதல் படமான சுவரில்லாத சித்திரங்கள் படத்திற்கு இசையமைத்தவர் கங்கை அமரன். அடுத்து ஒரு கை ஓசை படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.

தான் இயக்கும் படங்களில் இவர்கள் இருவரையும்மே மாறி மாறி இசையமைக்க வைத்த பாக்யராஜ், 1981-ம் ஆண்டு தான் இயக்கிய 4-வது படமான இன்றுபோய் நாளை வா படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றினார். அடுத்து விடியும் வரை காத்திரு, தூரல் நின்னு போச்சு, சின்னவீடு உள்ளிட்ட 4 படங்களில் மட்டும் இளையராஜா இசையில் இயக்கிய பாக்யராஜ், தான் கதை எழுதிய இது நம்ம ஆளு படத்திற்கு தானே இசையமைத்திருந்தார்.

1988-ம் ஆண்டு வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டிருந்தது, இந்த படத்திற்கு பின் பாக்யராஜ் இயக்கிய படங்களுக்கு இளையராஜா இசையமைக்காத நிலையில், பாக்யராஜ் மட்டுமல்லாமல் அவரது உதவியாளர்கள் இயக்கும் படங்களுக்கு இசையமைப்பதில்லை என்ற முடிவெடுத்துள்ளார். இந்த நிலையின் தான் பாக்யராஜூவின் உதவியாளரான பார்த்திபன் முதல் படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த படத்திற்கு பாக்யராஜ் தானே இசையமைப்பதாக சொல்ல, பார்த்திபன் ஒவ்வொரு இயக்குனருக்கும் அவரின் முதல் படம் இளையராஜா இசையமைத்தால் நன்றாக இருக்கும் என்று பார்த்திபன் சொல்ல, அவரின் ஆர்வத்தை புரிந்துகொண்ட பாக்யராஜ் நீங்கள் போய் கேளுங்கள் அவர் ஒப்புக்கொண்டால் பண்ணிங்கலாம் என்று சொல்ல, பார்த்திபனும், அவருடன் பன்னீர்செல்வம் என்பரும் இளையராஜாவை பார்க்க சென்றுள்ளனர். இவர்களை பார்த்த இளையராஜா கெட்அவுட் என்று கூறியுள்ளார்.

இவர்கள் இருவரும் மாறி மாறி காலில் விழுந்தும், இளையராஜா கடைசி வரை பார்த்திபன் படத்திற்கு இசையமைக்க ஒப்புக்கொள்ளவில்லை. 1989-ம் ஆண்டு வெளியான புதிய பாதை படமே பார்த்திபன் இயக்கி நடித்த முதல் படம். இந்த படத்திற்கு சந்திரபோஸ் என்பவர் இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply