• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரம்மாண்ட படைப்புகளை கொடுப்பதலில் ஆகச்சிறந்த இயக்குனராக இருப்பவர் ஷங்கர். 

சினிமா

பிரம்மாண்ட படைப்புகளை கொடுப்பதலில் ஆகச்சிறந்த இயக்குனராக இருப்பவர் ஷங்கர். எவ்வளவுதான் கோடிக்கணக்கில் பணத்தை போட்டு படத்தை பிரம்மாண்டமாக எடுத்தாலும் பார்ப்பதற்கு மிக எளிமையானவராகவே காணப்படுகிறார் ஷங்கர். அதற்கு காரணம் எப்போதுமே அவரின் படங்கள் மட்டுமே பேசுமே தவிர அவரைப் பற்றி எந்த தகவலும் வெளியே வராது.

பொதுவாக ஷங்கரை பொறுத்தவரைக்கும் ஒரு படம் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்றால் அந்தப் படத்தை பற்றி எந்தத்தகவலும் வெளியே வராமல் பார்த்துக் கொள்வார். கிட்டத்தட்ட 5 வருடங்களாக இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கையில் இன்னும் அந்தப் படத்தை பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. அதில் மிக கவனமாக இருப்பார். 

இப்பொழுதெல்லாம் இது விஜய் படம். இது அஜித் படம். இது ரஜினி படம் என்று ஹீரோக்களை முன்னிலைப்படுத்தியே அந்தப் படத்தை கொண்டாடி வருகிறோம். ஆனால் ஷங்கர் இயக்கிய படங்கள் கண்டிப்பாக அது ஷங்கர் படமாகத்தான் இருக்கும். அதில் எந்த சந்தேகமும் இருக்காது. எஸ்.ஏ.சந்திரசேகரிடம் எழுத்தாளராக சேர்ந்து பின்னர் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் ஷங்கர்.

 எஸ்.ஏ.சந்திரசேகரிடம் கிட்டத்தட்ட 15 படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். இதை பற்றி ஒரு சமயம் எஸ்.ஏ.சந்திரசேகரே என் உதவியாளரகளில் ஷங்கர் மட்டும்தான் அதிக படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்திருக்கிறார் என பெருமையுடன் கூறியிருப்பார். எஸ்.ஏ.சி மட்டுமில்லாமல் இயக்குனர் பவித்ரனிடமும் ஷங்கர் பணியாற்றியிருக்கிறார்.

 ஆரம்பத்தில் ஷங்கர் நடிகனாக வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டிருக்கிறார். இதை பற்றி ரஜினியே ஒரு பேட்டியில் ஷங்கர் நடித்துக் காட்டும் போது வியப்பாக இருக்கும். அவர் நடிப்பில் பாதியையாவது கொண்டுவர வேண்டும் என்ற அச்சத்தை வரவழைக்கும் என கூறியிருக்கிறார். இந்த நிலையில் நடிகர் நாசர் ஷங்கரை பற்றி ஒரு விஷயத்தை பகிர்ந்திருக்கிறார்.

அதாவது ஆரம்பத்தில் ஷங்கரிடம் இருந்த ஒரு பழக்கம் இப்போதும் இருக்கிறதா என தெரியவில்லை என கூறினார். அதாவது நடிகரின் மேல் ஷங்கருக்கு எப்போதும் நம்பிக்கை இருக்கும். ஒரு கேரக்டரை கொடுத்து இது உங்களால் பண்ண முடியும் என்று சொல்லியே நடிக்க வைப்பாராம். அதிலிருந்தே நடிக்கிறவர்களுக்கு ஒரு பயம் வந்துவிடுமாம். நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டுமே என்று பயந்தே நடிப்போம் என நாசர் கூறினார். ஆனால் இப்போது பல வெற்றிகளை பார்த்த பிறகு அதெல்லாம் இப்பொழுதும் இருக்கிறதா என தெரியவில்லை என நாசர் கூறினார்.
 

Leave a Reply