• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பொங்கலு பொங்கலு வக்க மஞ்சள மஞ்சள எடு தங்கச்சி....தங்கச்சி...தங்கச்சி....

சினிமா

காதல் பாட்டில் ஏன் தங்கச்சி தங்கச்சி என்றெல்லாம் வருகிறது என என்றாவது நினைத்திருக்கிறீர்களா?

பூவே பூச்சூடவா, பூவிழி வாசலிலே, பொம்முக்குட்டி அம்மாவுக்கு என பெரிய ஹிட்டுகளாக கொடுத்தாச்சு. இனி அடுத்து நல்ல படத்தை கொடுக்க வேண்டுமென நினைத்த இயக்குனர் ஃபாஸில் ஒரு அக்கா-தங்கை பாசக்கதையை கையிலெடுத்தார். அவரும் நண்பர்களும் சேர்ந்து தயாரித்த, 

('மணிச்சித்ரதாழு' கதையை எழுதிய) மதுமுட்டம் கதைக்கு ஃபாஸில் திரைக்கதை  எழுத, கமல் இயக்க, அம்பிகா-ரேவதி சகோதரிகளாக நடித்த 'காக்கோத்திக் காவிலே அப்பூப்பன் தாடிகள்' படம் வெற்றிகரமாக கேரளத்தில் ஹிட்டாகி ஓடிக்கொண்டிருந்தது. அதையே தமிழுக்கு எடுக்க நினைத்து பாடல் ரெக்கார்டிங் இறங்கினார் ஃபாஸில். வழக்கம் போல இளையராஜாவிடம் சிச்சுவேஷன் சொல்ல...பிறந்தது அந்தப்பாடல்.

காக்கோத்திக்காவிலே அ.தாடிகள் படத்தில் குழந்தைகளாக இரு சகோதரிகளும் விளையாடுவதும் அதற்கு பின்னணியாக 'கண்ணாம் தும்பி போறாமோ...என்னோடிஷ்டம் கூடாமோ' என்கிற பாட்டு தான் அந்தப்படத்தின் உயிர்நாடி. அதே டியூனில் சோகப்பாட்டும் அதாவது பேதாஸும் வரும். அதைப்போல பாட்டு ஃபாஸில் கேட்க பிறந்தது 'பொங்கலு பொங்கலு வச்சி...'. பாடல் பிடித்துப்போக பட வேலைகளில் இறங்கினார் ஃபாயில்.

காக்கோத்திப்படத்தின் கதைப்படி குழந்தையாக இருக்கும் போது பிச்சைக்காரன் ஒருவன் இரண்டாவது குழந்தையை தூக்கிச்சென்று விடுவான். பதினாறு வருடம் கழித்து அந்த குழந்தை ரேவதியாகி அவர்கள் ஊருக்கே பிச்சைக்காரர்கள் வருவார்கள். அதனால் 'வருஷம்-16' எனப்பெயர் வைத்தார் பாஸில்.

இப்போது இரண்டாவது பாட்டுக்கு ராஜாவிடம் கேட்க ராஜாவோ 'கதையைசொல்லுங்கள்...பாடல் போட்டுவிடுவோம்' என்று சொல்ல காக்கோத்திப்படத்தின் கதையை 

ஃபாஸில் சொல்கிறார். கதையை கேட்டதும் ராஜா "பிச்சைக்காரர்கள் கதையா? இது ஓடாது....ஓடினதா சரித்திரமே இல்லை...வேற கதையை பாருங்க" எனச்சொல்ல பாஸில் குழம்பிப்போய் விடுகிறார். 

வேறு கதைக்கு எங்கே போக?. அவரது தோல்வியடைந்த படமான

'என்னென்னும் கண்ணேட்டன்ட' படத்தின் கதையை சொல்ல ராஜாவோ "இது நல்லாருக்கே..இதையே கொஞ்சம் மாற்றி எழுதுங்க...நிச்சயம் வெற்றி பெறும்" எனச்சொல்ல ஃபாஸிலோ வருஷம் 16 டைட்டிலுக்கு ஏற்றாற்போல் நாயகன் கண்ணன் 16 வருடம் சிறைக்கு போவதாக மாற்றி பலவற்றை சேர்த்து ராஜாவின் பாடல்களோடு பிறந்தது வருஷம்-16.

இப்போ தங்கச்சி பாட்டை என்ன செய்வது? அதையே ராஜா சரணங்களில் காதல் வரிகளாக்கி 'நான் தூங்கியே நாளாச்சுது...' எல்லாம் சேர்த்துக்கொடுக்க சகோதரிப்பாசம் பாடல் காதல் 

பாடலானது.

படம் வாங்க ஆளில்லை. 

ஃபாஸில் மலையாள நண்பர்களை அழைத்து வினியோக உரிமை கொடுக்க அவர்கள் தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்தனர்.  படம் மூன்றாவது ஷோவிலிருந்து பிக்கப்பாகி தமிழ்நாட்டு வினியோகஸ்தர்கள் உரிமையை மாற்றி வாங்க கேரளாவுக்கு தேடி அலைந்ததெல்லாம் தனிக்கதை. செம ஹிட் வருஷம்-16.

பெரும் தோல்வியிலிருந்து அன்று ஃபாஸிலை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றது நம்ம இளையராஜா தான்...
 

Leave a Reply