• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அலி சப்ரி ரஹீம், சபை அமர்வுகளில் பங்கேற்கத் தடை

இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், இன்று தொடக்கம் ஒருமாத காலத்திற்கு நாடாளுமன்ற சபை அமர்வுகளில் பங்கேற்க முடியாதென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று அறிவித்துள்ளார்.

நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான குழுவின் தலைவர் சமல் ராஜபக்ஷவினால் 2024 ஜனவரி 24 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் பரிந்துரைகளின் பிரகாரம் இந்த இடைநிறுத்தம் விதிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் துபாயிலிருந்த 3.5 கிலோகிராம் தங்கம் மற்றும் 91 கையடக்க தொலைபேசிகளை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்த போது, சுங்கத்தினரால் தடுத்து வைக்கப்பட்டு, அபராதம் செலுத்திய பின்னர் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

எனினும் இதற்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கையை விரைவில் மேற்கொள்ளுமாறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சபாநாயகரிடம் கோரிக்கை கடிதமொன்றை சமர்ப்பித்திருந்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினருக்கான ஒழுக்க விதிகளை அலி சப்ரி ரஹீம் முழுமையாக மீறியுள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆளும் கட்சியால் கொண்டுவரப்படும் கட்டளைச் சட்டங்களுக்கு இந்நிலையில் அலி சப்ரி ரஹீமின் நாடாளுமன்ற வருகை இன்று தொடக்கம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
 

Leave a Reply