• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் மஹேல

இலங்கை

ஆசியாவின் மிகப் பெரிய செல்வந்தரான அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் அண்மையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

இத்திருமண விழாவில்  செல்வந்தர்கள், அரசியல் பிரபலங்கள், நடிகர்கள் , விளையாட்டு வீரர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அந்தவகையில் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல ஜெயவர்த்தனவும் குறித்த திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது பேஸ் புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “ஆனந்த் மற்றும் ராதிகாவுக்கு வாழ்த்துக்கள்! எனது ஆடைகளை வடிவமைத்து தந்த @olivecouture  நன்றி” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் திருமண விழாவில் மஹேல ஜெயவர்த்தன எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply