• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நீங்கள் தென் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை

சினிமா

1966 முதல் 1976 வரை தென் இந்தியாவின் அதிகப் படியான சம்பளம் வாங்கிய நடிகை செல்வி ஜெயலலிதா ஒரு ரூபாய் சம்பளம் என்று வாய் விமர்சனம் வைப்பவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லாத பல விஷயங்கள் அவரது சிறப்புக்களில் அமைந்திடும்... 
சூரிய காந்தி திரைப் படத்தின் கதை தயார் செய்து அக்கதையை செல்வி ஜெயலலிதாவிடம் சொன்ன பொழுது, கதை தனக்கு மிகவும் பிடித்து விட்டது என்று செல்வி ஜெயலலிதா கூற, திரைப் படத்தைப் பற்றி அதன் பின்னர் இயக்குனர் இவருக்கு எதுவுமே சொல்லவில்லையே என்று  இயக்குனரை அழைத்து செல்வி ஜெயலலிதா கேட்க அவரோ தயங்கிய படியே கூறினாராம் ,
"நீங்கள் தென் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை, உங்களுக்கு சம்பளம் கொடுக்கும் அளவிற்கு படத்தின் பட்ஜெட் இல்லை" என்று தயாரிப்பாளர் தரப்பு நினைக்கிறது என்று... 

அதற்கு செல்வி ஜெயலலிதா சிரித்துக் கொண்டே , எனக்கு ஒரு ரூபாய் சம்பளம் போதும் இந்தப் படத்தில் நான் நடித்துக் கொடுக்கிறேன் என்று சொல்ல, திரைப் படமும் தயாரானது, வெற்றியும் பெற்றது.
பேசிய படி ஒரு ரூபாய் சம்பளமே போதும் என்று கூறிவிட்டார் செல்வி ஜெயலலிதா .தயாரிப்பாளர் தரப்பு நிர்பந்தித்து கொடுத்தப் பொழுது வாங்க மறுத்தவர் அவர் .... 
1970 களிலேயே போயஸ் தோட்ட இல்லத்தை 
 வாங்கினார் ... 
வீட்டில் அவர் அதிகப் படியாக செலவிடுவது அங்கே அவர் அமைத்திருக்கும் நூலகத்திலும், பூஜையறையிலும் தான். நடிகவேள் எம் ஆர் ராதா அவர்கள் கட்டிய வீடு ஏலத்திற்கு வந்தப் பொழுது, அப்பொழுது ஆட்சியில் இருந்த கருணாநிதி, தனது கட்சியில் இருந்த ராதா ரவிக்கு உதவ மறுத்துவிட்ட நிலையில், வீட்டை மீட்டுத் தந்தவர் செல்வி ஜெயலலிதா இப்படி பலருக்கு அவர் செய்துள்ள உதவிகள் வெளியில் வாரமேலே நன்றி உணர்வுடன் சம்மந்தப் பட்டவர்கள் நினைத்துப் பார்கின்றனர் . 
நாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம் நிர்மாணித்த நாட்டிய கலைக்கூடத்திற்கு பல கோடி ரூபாய் தனது சொந்தப் பணத்திலிருந்து கொடுத்துள்ளார்.
எத்தனையோ கலைஞர்களுக்கு அவர் தனது சொந்தச் செலவில் பல உதவிகள் செய்துள்ளார்.
தனது 17 ம் வயது முதல் வருமான வரி கட்டி வருபவர் அவர்... 
அந்தக் காலக் கட்டத்தில் வருமான வரிக் கணக்கை சரியாக வைத்திருந்த மிகக் குறைந்த திரைத் துறையினரில் அவரும் ஒருவர் சறுக்கல்கள் இல்லாத வாழ்க்கையில்லை... 
சில இடங்களில் அவரை சூழ்ந்திருந்தவர்களால் சில பிரச்சனைகளில் சிக்கியிருக்கலாம், ஆனால் பிறர் சொத்தை அபகரிக்க வேண்டும் என்கிற எண்ணம் சற்றும் கொண்டிருக்காதவர் அவர்... 
தனி நபராக, அரசியலைக் கடந்து , அந்தப் பெண்மணியின் சாதனைகள் ஆச்சரியமூட்டும் விஷயம் தான்... 
2 வயதில் தந்தையை இழந்து 22 வயதில் தாயையும் இழந்து தனியாளாக தன்னை தமிழகத்தின் மிகப் பெரிய அரசியல் சக்தியாக மாற்றிக் கொள்வது என்பது சாதாரண விஷயமே கிடையாது அந்த வகையில் அம்மாவுக்கு நிகர் அவரே...

J_Jayalalitha_Amma_Foreve
 

Leave a Reply