• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மாணவர்களின் சுமைகளைக் குறைக்க கல்வி அமைச்சு நடவடிக்கை

இலங்கை

மாணவர்களின் பாடசாலைப் புத்தகப் பைகளின் எடையைக் குறைப்பதற்கான அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்றறிக்கை இன்று வெளியிடப்படும் என மேல் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சிறிசோம லொகுவிதான தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”மாணவர்கள் தனது புத்தகப் பைகளில் அதிகளவான புத்தகங்களை சுமந்து செல்வதால் முள்ளந்தண்டுப் பிரச்சினை உள்ளிட்ட உபாதைகள் அவர்களுக்கு ஏற்படுவதாக சுகாதாரத்துறையினர் அண்கைக் காலமாக சுட்டிக்காட்டி வருகின்றனர். இந்நிலையில், கல்வி அமைச்சு இது குறித்து கவனம் செலுத்தியுள்ளது.

அதற்கமைய, மாணவர்களின் பாடசாலைப் பைகளின் எடையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை கல்வி அமைச்சு மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையிலேயே, மாணவர்களின் பாடசாலைப் பைகளின் எடையைக் குறைப்பதற்கான அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்றறிக்கை இன்று வெளியிடப்படும்.

அத்துடன் பாடப்புத்தகங்களுக்கு பதிலாக தொழில்நுட்ப உபகரணங்களை வழங்குவதன் மூலம் மாணவர்கள் எதிர்கொள்ளும் பாடசாலை புத்தகப் பைகளின் எடைப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்” இவ்வாறு   மேல்மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சிறிசோம லொக்குவிதான குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply