• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வீரம்னா என்னனு தெரியுமா? பயம் இல்லாத மாதிரி நடிக்கிறது

சினிமா

கமலஹாசனின் குருதிபுனல் திரைப்படத்தில் ஒரு வசனம் மிக பிரபலம். நாசரிடம் கமல் சொல்லுவார் 'வீரம்னா என்னனு தெரியுமா? பயம் இல்லாத மாதிரி நடிக்கிறது'. ஆனால் அது மட்டும் இல்லை வீரம் என்றால் உடல் வலிமையை காட்டுவது, எதிர் இருப்பவரை அஞ்ச வைப்பது, மீசையை முறுக்குவது , வேட்டியை மடித்து கட்டுவது என்று அடுக்கிக்கொண்டே போகலாம். பொதுவாகவே வீரம் என்பது உடலுடன் மட்டுமே தொடர்புபடுத்தி பார்க்க படுகிறது. உடல் பலத்தை தாண்டி அச்சப்பட என்ன இருக்கிறது?

ஒரு காலத்தில் உலகமே ஒருவனை கண்டு அச்சம் கொண்டது. அவன் பயந்தது போல் நடித்ததில்லை. கடைசி வரை துணிந்தே நின்றான். பல கோடி மக்களை கொன்று, சர்வாதிகாரத்திற்கு மிக சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்கிய ஹிட்லர் இல்லை. ஒருமுறை கூட வன்முறை நிகழ்த்தாதவன். அடுத்த வேலை உணவுவிற்கு மட்டும் இல்லை, பிணியில் இருந்து தன் மனைவி குழந்தைகளை கூட காப்பாற்ற முடியாதவனை பார்த்துதான் உலகம் அஞ்சியது. அப்படி என்ன அவனிடம் பேராயுதம் இருந்தது? சிந்தனை. இடைவிடாமல் சிந்தித்து கொண்டே இருந்தான்.

வறுமை , பசி, பட்டினி , பஞ்சம் , நோய் , இறப்பு என்று அடுக்கடுக்காக வந்த போதிலும் அவன் சிந்திப்பதை மட்டும் நிறுத்திக்கொள்ளவே இல்லை. பல முறை நாடுகடத்தப்பட்டான் , சிந்திப்பதை நிறுத்தவில்லை. அப்படி எதை பற்றித்தான் சிந்தித்தான்? உலக தொழிலாளர்கள் ஒன்று கூடுவதை பற்றி சிந்தித்து கொண்டே இருந்தான். உலக சமத்துவத்தை பற்றி சிந்தித்து கொண்டே இருந்தான். அணு ஆயுதம் ஏந்திய ஹிட்டலருக்கு அச்சப்படாத உலகம், தன் சொந்த குழந்தைகளை கூட காப்பாற்ற முடியாத கார்ல் மார்க்ஸை பார்த்து அச்சம் கொண்டது. 

உலக மக்கள் அவன் கல்லறையில் நாள் தோறும் பூக்கள் சிந்த , தன் சிந்தனையிலேயே உயிர் பிரிந்தார் மார்ஸ். அவன்  கல்லறை எங்கு இருக்கிறது என்று கூட தெரியாமல் , அதை பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் இல்லாமல் உலகம் இருக்க  , தோல்வி பயத்தால் தன் உயிரை தானே பறித்து கொண்டார் ஹிட்லர். 

வீரம் என்பது பயம் இல்லாதது போல் நடிப்பது அல்ல. வீரம் என்பது சிந்தித்து கொண்டே இருப்பது. கேள்விகள் கேட்டுக்கொண்டே இருப்பது, பதில்கள் சொல்லி கொண்டே இருப்பது. வீரம் என்பது அறிவு. வீரம் என்பது அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுப்பது. வீரம் என்பது அறத்தின் பக்கம் நிற்பது. வீரம் என்பது வேறுபாடுகளை களைவது. 

இயற்கைக்கு எதிராய் கட்டமைக்கப்படும் அனைத்தும் அநீதிகளே. அவற்றை உடைத்தெறிய நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் வீரம் தான். 

-நன்றி சுமதி விஜயகுமார்

Leave a Reply