• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அல்டிமேட் ஸ்டார் அஜித்குமாரை தல என அழைக்க வைத்த திரைப்படம் தீனா.

சினிமா

நடிகர் அஜித் குமார் நடித்து, தீனா திரைப்படம் வெளியாகி 23ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது. இந்நிலையில் அதை டிவிட்டரில் அஜித் ரசிகர்கள் நினைவுகூர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

ஆம். இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸின் முதல் படமாக ஜனவரி 14ஆம் தேதி பொங்கலை ஒட்டி, 2001ஆம் ஆண்டு இப்படம் வெளியானது. இப்படத்தில் அஜித் குமார், மலையாள நடிகர் சுரேஷ் கோபி, லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர். இப்படத்துக்குண்டான பின்னணி இசையை யுவன் சங்கர் ராஜா செய்திருந்தார். பாடல்களும் செம ஹிட்டானது. இப்படத்துக்குண்டான ஆக்‌ஷன்மோட் ஒளிப்பதிவினை அரவிந்த் கமலநாதன் மேற்கொண்டிருந்தார். இப்படத்தில் தான் முதன்முதலாக, ‘தல இருக்கும்போது வால் ஆடக்கூடாது’ என்னும் வசனத்தை ஸ்டண்ட் மேன் மகாநதி ஷங்கர் பேசியிருப்பார். அன்று முதல் பல ஆண்டுகளாக, தல என ரசிகர்களால் செல்லப்பெயருடன் அழைக்கப்பட்டார், அஜித். ஆனால், சில ஆண்டுகளுக்குப் பின், அந்தப் பெயரை சொல்லி அன்புக்கட்டளையிட்டார், அஜித். மேலும் தன்னை அஜித் என்றும்; ஏ.கே. என்றும் அழைத்தால் போதும் என்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தேன்மொழி

Leave a Reply