• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காலி சிறைச்சாலையில் மேலும் ஒரு கைதி மூளைக் காய்ச்சலால் பாதிப்பு

இலங்கை

காலி சிறைச்சாலையில் மற்றுமொரு கைதி, மூளைக்காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், குறித்த கைதி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலை சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

காலி சிறைச்சாலையில் ஒரு கைதியும், மாத்தறை சிறைச்சாலையில் 02 கைதிகளும் என மூவர் சில மாதங்களுக்கு முன்னர் காய்ச்சலால் உயிரிழந்திருந்தனர்.

அத்துடன், பல கைதிகள் மூளைக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply