• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜேர்மனி பாடகி தமிழ்நாட்டில் மனமுருகி பாடிய பக்தி பாடல் வைரல்

சினிமா

சமூக வலைத்தளத்தில் புகழ்பெற்ற ஜேர்மனி பாடகி கசாண்ட்ரா, தமிழக மாவட்டம் கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் பக்தி பாடல் பாடிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஜேர்மனி நாட்டைச் சேர்ந்த பாடகி கசாண்ட்ரா. பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவர் சமூக வலைதளத்தில் பிரபலமானவர் ஆவார்.

இவர் கன்னட பாடல்களை பாடி வெளியிட்ட வீடியோ பல்வேறு பார்வைகளை பெற்றது. இந்த நிலையில் கசாண்ட்ரா முதல் முறையாக இந்தியா வந்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் உள்ள ஈஷா மையத்திற்கு வந்த இவர், அங்கு சத்குரு ஜக்கி வாசுதேவை சந்தித்து பேசியுள்ளார்.

அதன் பின்னர் சமஸ்கிருத பக்தி பாடல் ''நிர்வாண ஷடகத்தை'' அவர் பாடிய வீடியோவை ஜக்கி வாசுதேவ் எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார். 

அத்துடன், பக்தி என்ற தடைகள் ஏதும் அறியாத மொழியில் நீங்கள் பாடுவதை கேட்பது சிறந்த விருந்தாக இருந்தது. உங்களுக்கு என் வாழ்த்துக்களும், ஆசியும் என குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு பதில் அளிக்கும் வகையில் கசாண்ட்ரா, ''நான் கேட்டதிலேயே மிகவும் ஊக்கமளிக்கும் வார்த்தைகள் இவை. உங்களோடு இருந்த தருணங்களை எண்ணி மகிழ்கிறேன்'' என பதிவிட்டார்.

தற்போது கசாண்ட்ரா பாடிய பாடல் தொடர்பான வீடியோ வைரலாகியுள்ளது.   
 

Leave a Reply