• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இளவரசி கேட் மிடில்டன் எங்கே ? தேடும் பிரிட்டன் மக்கள்

 பிரிட்டிஷ் இளவரசர் சார்லசின் மனைவி, கேத்தரின் மிடில்டன் (Kate Middleton). இவர் சுமார் இரண்டு மாதங்களாக, பொதுவெளியில் காணப்படவில்லை.

இந்நிலையில் கேத்தரின் காணப்படாமை தொடர்பில்ம் பல்வேறு யூகங்களுக்கும், சந்தேகங்களுக்கும் வழிவகுத்துள்ளது.

கடந்த ஜனவரி 17 அன்று, பிரிட்டிஷ் அரண்மனையின் அதிகாரபூர்வ அலுவலகம், கேத்தரினுக்கு வயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை நடைபெற்றதாகவும் அவர் ஈஸ்டர் பண்டிகை காலகட்டத்தில் மீண்டும் பொதுவெளிக்கு திரும்புவார் என தெரிவித்தது.

எனினும் , இதுவரை கேத்தரின் காணப்படாததால் சமூக வலைதளங்களில் ஏராளமான வதந்திகள் பரவி வருகின்றன. கேத்தரினின் உடல்நலம் குறித்தும் சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், அரண்மனை வட்டாரங்கள் இதுவரை அதிகாரபூர்வமாக ஏதும் தெரிவிக்கவில்லை.

இதற்கு சான்றாக, ஒரு நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ், பாதியிலேயே "சொந்த விஷயமாக" புறப்பட்டு சென்றதாகவும், மனைவியின் உடல்நலம் குறித்து ஏதும் தெரிவிக்காமல் இருப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அதேவேளை கேத்தரினுக்கும், அவரது கணவர் சார்லசிற்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளதாகவும், அதனால் கேத்தரின் மன உளைச்சலில் இருப்பதாகவும் அரண்மனைக்கு நெருக்கமானவர்கள் சிலர் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் உடல்நலம் தேறி வந்த கேத்தரின், திடீரென "கோமா" நிலைக்கு சென்று விட்டதாகவும் சில உறுதிப்படுத்தப்படாத கருத்துகள் இணையத்தில் உலவுகின்றன.

இவ்வாறான நிலையில் பிரிட்டிஷ் அரண்மனைக்கு விசுவாசமிக்க இங்கிலாந்து மக்கள் கேத்தரின் விரைவில் உடல்நலம் தேற வேண்டும் என்பதையே விரும்புகின்றனர் எனவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.
 

Leave a Reply