• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஈழத்தமிழர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டிய ஒரு கனடிய அரசியல் தலைவரது இறப்பு

கனடா

நேற்று வியாழக்கிழமை 29ம் திகதி கனடாவில்  எம் தமிழ் மக்களால் மறக்க முடியாத ஒரு பிரதமராக விளங்கிய  பிரைன் மல்ரோனி அவர்கள் தனது 84 வயதில் மறைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொன்சர்வேர்ட்வ் கட்சியின் அரசாங்கத்தின் பிரதமராக பதவி வகித்த இவரது மரணத்தை நாம் "ஈழத்தமிழர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டிய ஒரு கனடிய அரசியல் தலைவரது இறப்பு" என்று குறிப்பிடுகின்றோம்.
பிரையன் மல்ரோனி அவர்கள் 1984 முதல் 1993 வரை கனேடியப் பிரதமராகப் பணியாற்றினார், அவரது பணிக்காலத்தில்  கனடாவின் கரையொன்றில்  சட்டவிரோதமாக கப்பல் ஒன்றில் வந்திற
ங்கினார்கள்,   நூற்றுக்கணக்கான எமது ஈழத்தமிழர்கள்.

அவர்களை அகதிக் கோரிக்கையாளர்களாக கனடிய அரசாங்கம் ஏற்றுக்கொள்வதா அன்றி அவர்களை 'வந்த வழியே ' திருப்பி அனுப்புவதா? என்ற விவாதம் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் "அவர்களை திருப்பி அனுப்புங்கள்' என்று முழங்கினார். சக உறுப்பினர்களும் சத்தமிட்டுச்  சொன்னார்கள். 
ஆளும் கட்சியின் சில உறுப்பினர்களுக்கும்  அகதிகளாக வந்த ஈழத்தமிழர்களை அகதிக் கோரிக்கையாளர்களாக கனடிய அரசாங்கம் ஏற்றுககொள்ளக்கூடாது என்று ரகசியமாகத் தெரிவித்தார்கள். 
ஆனால் பிரதமர் மல்ரோனி அவர்கள் எழுந்து நின்று அமைதியாகச் சொன்னார்
"கனடாவில் வாழும் மக்களில் பெருந்தொகையானவர்கள் இந்த நாட்டுக்கு அகதிகளாக வந்தவர்களே! எனவே  நேற்று வந்த இவர்களுக்கும் அகதிக்கோரிக்கையை சமர்ப்பிக்க உரிமை உள்ளது. எனவே எமது அதிகாரிகள் அவர்களை உள்ளே அனுமதிக்கட்டும் .அவர்களை நாம் விசாரிப்போம். பின்னர் தீர்மானிப்போம்" என்றார்.
இந்த அற்புதமான தலைவருக்கு  நாம் மரியாதையோடு  'பிரியாவிடை' கொடுப்போம்!'
 

 

Leave a Reply