• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நெல் விற்பனை வீழ்ச்சி – விவசாயிகள் குற்றச்சாட்டு

இலங்கை

அரிசி விலைகள் உயர்ந்தாலும் நெல் ஆலை உரிமையாளர்கள் மிகக் குறைந்த விலைக்கு நெல்லை கொள்முதல் செய்வதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் அறுவடை செய்யப்பட்ட நெல் விற்பனை செய்வதில் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை பயிர் விற்பனையில் விவசாயிகளுக்கு அநீதி இழைக்கப்படுவதாக அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனம் கூறியுள்ளது.

மேலும் நெல் விலையை அதிகரிக்க வேண்டுமாயின் அரிசியின் விலையை மேலும் அதிகரிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 

Leave a Reply