• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பஞ்சாப் மாகாண முதல் மந்திரியாக பதவியேற்றார் மரியம் நவாஸ்

பாகிஸ்தான் பாராளுமன்றம் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட 5 மாகாண சட்டசபைகளுக்கும் பொதுத்தேர்தல் கடந்த 8-ம் தேதி நடந்தது. இதில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

பஞ்சாப் மாகாண சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் சுயேட்சைகள் மரியம் நவாஸ் ஷெரீபுக்கு ஆதரவு தந்தனர்.

பஞ்சாப் மாகாண சட்டசபையானது முதலில் கூட்டத்தொடரை தொடங்க உள்ளது. பஞ்சாப் சட்டசபையை வெள்ளிக்கிழமை கூட்டும்படி கவர்னர் பலிகுர் ரகுமான் அழைப்பு விடுத்திருந்தார்.

மூன்று முறை பிரதமராக பதவி வகித்த நவாஸ் ஷெரீப் மகள் மரியம் நவாஸ் பஞ்சாப் மாகாணத்தின் முதல் பெண் முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், பஞ்சாப் மாகாண முதல் மந்திரியாக மரியம் நவாஸ் இன்று பதவியேற்றார். இதன்மூலம் பஞ்சாப் மாகாணத்தின் முதல் பெண் முதல் மந்திரி என்ற பெருமையை பெற்றார்.
 

Leave a Reply