• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தாயின் வாக்கைக் காப்பாற்ற ஸ்ரீ தேவி செஞ்ச தரமான செயல்.. ஜீன்ஸ் படத்தின் அடிப்படைக் கதையே இதான்

சினிமா

திரையுலகில் ஒவ்வொரு நடிகைக்கும் தனித்தனி ரசிகர் பட்டாளம் இருக்கும். ஆனால் அனைவருக்குமே பிடித்த ஒரு கதாநாயகியாக ஜொலித்து தமிழ் மட்டுமல்லாது இந்தி சினிமா உலகையும் தன் அழகாலும், திறமையாலும் வசியப்படுத்தி ஆண்டவர் நடிகை ஸ்ரீ தேவி. கலையான முகம், அமைதியான குரல், பக்கத்து வீட்டுப் பெண் போன்ற தோற்றம் என தன்னுடைய வசீகர தோற்றத்தால் சினிமாவில் ஜொலித்து கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்தவர்.

நடிகை ஸ்ரீ தேவி உடல்நிலை சரியில்லாத தன் தாயாரின் இக்கட்டான சூழ்நிலையிலும் அவர் ஆசைப்பட்டபடி ஒரு படத்தில் நடித்துக் கொடுத்தார். அந்தப் படம்தான் தேவராகம். இதுதான் அவரது தாயாரின் விருப்பத்தை கடைசியாக நிறைவேற்றிய படமாகும்.

இயக்குனர் பரதன் மூன்றரை வயது சிறு குழந்தையான ஸ்ரீதேவியை முதன் முதலில் சோப்பு விளம்பரம் ஒன்றிற்கு போட்டோ எடுத்தாராம், அந்த கைராசியை ஸ்ரீதேவியின் தாயார் ராஜேஸ்வரி ஐயப்பன் நீண்ட காலம் மறக்கவேயில்லையாம்.

அரவிந்த்சாமி நடிப்பில் மலையாளத்தில் உருவான, தேவராகம் படத்தில் வரும் லஷ்மி என்ற  கதாபாத்திரத்திற்கு தேர்ந்த நடிகையை நடிக்க வைக்க எண்ணினார் இயக்குனர் பரதன், இப்படத்தின் கதையை ஸ்ரீதேவிக்கு சொல்ல அவர் வீட்டுக்குப் போனவரை ஸ்ரீதேவி தாயார் நன்கு நினைவில் வைத்திருந்தாராம்.

பரதன் படத்தில் நீ எத்தனை தடை வந்தாலும் நடிக்க தான் வேண்டும் என மகளிடம் சொன்னாராம் ஸ்ரீதேவியின் தாயார். ஆனால் படம் துவங்கியதும் ஸ்ரீதேவியின் தாயாருக்கு மூளைப் புற்றுநோய் முற்றிய நிலையில் கண்டறியப்பட சிகிச்சைக்காக அமெரிக்கா கொண்டு செல்லப்படுகிறார்.

உடன் ஸ்ரீதேவியும் போகிறார், இவரால் ஆரம்பிக்கப்பட்ட படம் இடையிலேயே நிற்கிறது. மிகவும் இக்கட்டான சூழ்நிலை. ஸ்ரீதேவி நினைத்தால் ஒரே போன் காலில் நான் படம் நடிக்க முடியவில்லை என சொல்லியிருக்கலாம், ஆனால் இவர் தாயார் வேண்டுகோளுக்கிணங்க, இயக்குனருக்கு தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இப்படத்தை முடிக்க அவரை அனுப்பி வைக்கிறார்,

இது போல பல முறை இவர் விமானத்தில் பல முறை பறந்து வந்து இப்படத்தை முடித்துத் தந்தாராம் ஸ்ரீதேவி. இப்படம் முற்பாதி முழுக்க இவருக்கு வண்ண வண்ண உடைகள், கனவுப் பாடல்கள், என முழுதும் வண்ணம், அணிகலன்கள், அவற்றை எல்லாம் மாணவி போல குறித்துக் கொண்டு வந்து அவரேமுந்தைய நடிப்பைப் பார்த்து பார்த்து நடித்துத் தந்தாராம்.

இப்பட ஷூட்டிங்கின் போது ஒரு போதும் தன் சம்பளத்தைப் பற்றி பேசவேயில்லையாம் ஸ்ரீதேவி. அப்போது அவர் இந்தியில் அப்போது வாங்கிய சம்பளத்தில் ஐந்தில் ஒரு மடங்கு சம்பளம் தான் நடிக்க தரப்பட்டது என இயக்குனர் பரதனின் மனைவியும் மலையாள சினிமாவின் முக்கியமான நடிகையுமான கேபிஏஸி லலிதா பேட்டியில் பகிர்ந்திருந்தார்,

ஆனால் துரதிர்ஷ்டவசமாக 1997 ஆம் ஆண்டில் ஸ்ரீதேவியின் தாயார் மூளைப் புற்றுநோயுடன் போராடி மடிந்தார், அவருக்கு தவறுதலாக மூளையில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சையும் அவர் மரணிக்க காரணமாக அமைந்தது. இவரது இந்த நிகழ்வு தான் பின்னாளில் ஷங்கர் இயக்கத்தில் ஜீன்ஸ் படத்தில் லட்சுமி கதாபாத்திரம் உருவாகக் காரணமாக அமைந்தது.
 

Leave a Reply