• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விஜய் படத்தில் வரும் ஹிட் பாட்டு இந்த பாட்டோட அப்டேட் வெர்ஷனா..? போட்டுடைத்த கவிஞர் யுகபாரதி!

சினிமா

நடிகர் விஜய்யின் சூப்பர் ஹிட் திரைப்படங்களில் ஒன்று திருமலை. புதுமுக இயக்குநர் ரமணா இயக்கத்தில் கடந்த 2003-ல் வெளியான இப்படம் கமர்ஷியல் கதையைக் கொண்டது. படமும் வெளியாகி வெற்றியைப் பெற்றது. விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா  நடித்த இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் அப்போது அனைத்து மியூசிக் சேனல்களையும் தாளம் போட வைத்தன. இப்படத்தில் இடம்பெற்ற 5 பாடல்களையும் 5 வெவ்வேறு கவிஞர்கள் எழுதியிருந்தனர்.

இந்நிலையில் இப்படத்தில் யுகபாரதியின் வரிகளில் இடம்பெற்ற பாடல்தான் நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது என்ற பாடல். காதல் தோல்வியில் இருக்கும் ஹீரோ ஹீரோயினைப் பார்த்து கேள்வி கேட்பது போல் இந்தப் பாடல் இடம்பெற்றிருக்கும். இந்தப் பாடலானது பழைய பாடல் ஒன்றின் அடிநாதத்தைத் தழுவி எழுதப்பட்டதாக யுகபாரதி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அவர் பேசும் போது, “இயக்குநர் ரமணா  பாடலின் சுச்சிவேஷனை என்னிடம் கூறும் போது எனக்கு வரிகள் தோன்றவில்லை. ஏனெனில் அப்போது அஜீத் பாட்டான சந்தன தென்றலை பாடல் மிகப் பிரபலமாக இருந்தது. ஏனெனில் அந்தப் படத்தில் கதைப்படி ஹீரோ உதவி இயக்குநர் அவருக்கு கவித்துவ வரிகள் சரியாக இருந்தது.

ஆனால் திருமலை படத்தில் கதைப்படி ஹீரோவுக்கு ஒர்க்ஷாப் மெக்கானிக் வேடம். ஆனால் அவர் கவித்துவமாக எப்படி காதலியிடம் தன் மனநிலையைக் கூறுவார். எனவே பேசுவது போல் வரிகள் எழுத வேண்டும் என்று யோசித்த போது நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் இடம்பெற்ற கண்ணதாசனின் வரிகளான சொன்னது நீ தானா சொல் சொல் என்ற பாடல் நினைவுக்கு வந்தது.

உடனே அதையே அடிப்படையாக வைத்து நீயா சொல்லியது என்று எழுதினேன். இசையமைப்பாளர் வித்யாசாகரிடம் கூற அவர் சொல்லியது என்ற வார்த்தை திருப்தியாக இல்லை எனவே பேசியது என்று போடலாம் என்று கூற உருவானது தான் நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது என்ற பாடல். பின்னர் சங்கர் மகாதேவன் குரலில் இந்தப் பாடல் ரிக்கார்டிங் செய்யப்பட்டடு படத்தில் இடம்பெற்றது“ என்று யுகபாரதி கூறினார்.

தேன்மொழி

Leave a Reply