• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பொலிஸ் அதிகாரங்களை நீக்கும் சட்டமூலம் உதய கம்மன்பிலவினால் சமர்ப்பிப்பு

இலங்கை

மாகாண சபைகளில் இருந்து பொலிஸ் அதிகாரங்களை நீக்குவது தொடர்பான தனிநபர் சட்டமூலம் பிவித்துறு ஹெல உறுமயவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில இன்று சபையில் முன்வைத்தார்.

13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைவாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரத்தை நீக்கும், 22 ஆவது திருத்தச்சட்டத்தை பிவித்துறு ஹெல உறுமயவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில இன்று சபையில் முன்வைத்தார்.

தனிநபர் சட்டமூலமாக இவரால் முன்வைக்கப்பட்ட இதனை, நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸாமில் வழிமொழிந்தார்.

13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைவாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரம், நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில சுட்டிக்காட்டியிருந்தார்.

இதனை நீக்கும் வகையில் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் கடந்த ஆண்டே, தனிநபர் பிரேரணையாக உதயகம்மன்பிலவினால் சபையில் முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள 22 ஆவது திருத்தச்சட்ட மூலத்தையே உதயகம்மன்பில இன்று நாடாளுமன்றில் சமர்ப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply