• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மறுத்த எம்.எஸ்.வி: கலங்க வைத்த அந்தப் பாடகி 

சினிமா

1957-ம் ஆண்டு வெளியான மகாதேவி திரைப்படத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. எம்.ஜி.ஆர்.சாவித்ரி இணைந்து நடித்த இந்த படத்தை சுந்தர் ராவ் நட்கர்னி இயக்கியிருந்தார்.  கவியரசர் கண்ணதாசன் – இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இடையே நெருங்கிய நட்பு இருந்தாலும், கண்ணதாசன் சிபாரிசு செய்த ஒரு பாடகிக்கு எம்.எஸ்.வி வாய்ப்பு கொடுக்க தயங்கியுள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்

தமிழ் சினிமாவில் க்ளாசிக் ஹிட் பாடல்களை எடுத்துக்கொண்டால் அதில் எம்.எஸ்.விஸ்வநாதன் – கவியரசு கண்ணதாசன் கூட்டணியில் உருவான பல பாடல்களை சொல்லலாம். இவர்கள் இருவரும் இணைந்து எம்.ஜி.ஆர் சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருக்கும் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளனர். அதேபோல் இவர்களுக்கு இடையேயான உறவு தமிழ் சினிமாவில் இன்றும் பெருமையாக பேசப்படும் ஒரு நிகழ்வாக உள்ளது.

மேலும் எம்.எஸ்.விஸ்வநாதன் நடித்த காதல் மன்னன் படத்தில் கூட அவர் கவியரசு கண்ணதாசன் குறித்து புகழ்ந்து பேசி நடித்திருப்பார். படத்தில் அவர் வைத்திருக்கும் மெஸ்க்கு கூட கண்ணதாசன் மெஸ் என்றே பெயரிட்டிருப்பார். இவர்களுக்கு இப்படி ஒரு நட்பு இருந்தாலும் எம்.எஸ்.வி கண்ணதாசன் இடையே சில சுவாரஸ்யமாக சம்பவங்களும் நடந்துள்ளது.

அந்த வகையில், 1957-ம் ஆண்டு வெளியான மகாதேவி திரைப்படத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. எம்.ஜி.ஆர்.சாவித்ரி இணைந்து நடித்த இந்த படத்தை சுந்தர் ராவ் நட்கர்னி இயக்கிய நிலையில், எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்துள்ளனர். படத்திற்கான திரைக்கதை எழுதியது மட்டுமல்லாமல், 3 பாடல்களையும் கண்ணதாசன் எழுதியிருந்தார். இந்த படத்தில் ஒரு உணர்ச்சிகரமான பாடலை பாடுவதற்காக பாடகி ஜமுனா ராணி பெயரை எம்.எஸ்.வியிடம் சிபாரிசு செய்துள்ளார் கண்ணதாசன்.

ஆனால் அவரது பெயரை எம்.எஸ்.வி எளிதில் ஏற்றுக்கொள்ளவில்லை. சினிமாவில் கவர்ச்சிப்பாடல்களை பாடக்கூடிய அவர் இந்த பாடலை எப்படி உணர்வுப்பூர்வமாக பாடுவார்என்று கேட்டு அவருக்கு வாய்ப்பு கொடுக்க மறுத்துள்ளார். இந்த சம்பவம் நடந்த காலக்கட்டத்தில் ஜமுனா ராணி பெரிய வெற்றிப் பாடல்களை கொடுத்தவர். எம்.எஸ்.வி சொன்னதை கேட்டு, கோபமான கண்ணதாசன், இந்த பாடலை அவர் பாடினால் நன்றாக இருக்கும் என்று நான் சொல்கிறேன் என்றால் எனக்கு தெரியாமலா நான் சொல்கிறேன் என்று வாக்குவாதம் செய்துள்ளார்.      இப்போது அவரை பாட வையுங்கள். அவர் பாடுவது சரியில்லை என்றால் இந்த பாடல் பதிவுக்கான மொத்த செலவையும் நானே ஏற்றுக்கொள்கிறேன் என்று கண்ணதாசன் சொல்ல, எம்.எஸ்.வி ஒப்புக்கொண்டு ஜமுனா ராணியை பாட வைத்துள்ளார். இந்த பாடலை அவர் பாடி முடித்தவுடன் மிகவும் அற்புதமாக இருக்கிறது என்று படத்தின் இயக்குனர் பாராட்டியுள்ளார். அதன்பிறகு அவர் வெளியில் வந்தவுடன் எம்.எஸ்.வி தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டுள்ளார்.

காமுகர் நெஞ்சில் என்று தொடங்கும் இந்த பாடலை மருதகாசி எழுதியிருந்த நிலையில், ஜமுனா ராணி அற்புதமாக பாடி தன்னை வேண்டாம் என்று சொன்ன எம்.எஸ்.விக்கு தனது திறமையை நிரூபித்து உள்ளார்.

Sampatth Kumar

Leave a Reply