• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எந்த பாடசாலைக்கும் கிடைக்காத அரியவாய்ப்பு..

இலங்கை

கடவட மஹாமாயா பெண்கள் கல்லூரியின் மாணவர் நாடாளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு நேற்று முன்தினம்(19) அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றது.இதன் பின்னர் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் மாணவர்கள் சிநேகபூர்வ சந்திப்பொன்றை மேற்கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது.

அதிபர் அலுவலகத்தில் அமைச்சரவை நடைபெறும் இடத்துக்கு சிறுவர்களை அழைத்து அமைச்சரவை என்றால் என்ன, அதன் அமைப்பு, செயல்பாடுகள் குறித்து அவர்களுக்கு அதிபர் ரணில் தெரிவித்தார்.

நாட்டின் முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் அமைச்சரவை கூடும் அதே இடத்தில் முதன்முறையாக பாடசாலை மாணவர்கள் அதனை வழிநடத்தும் அதிபருடன் கலந்துரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தமையும் விசேட அம்சமாகும்.

மாணவர் நாடாளுமன்றத்தில் அமைச்சுப் பதவிகளை வகிக்கும் மாணவர்களுக்கு அமைச்சரவையின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்தும் அதிபர் விளக்கமளித்தார்.

ஆட்சிக் கட்டமைப்பைப் பற்றி முழுமையான அறிவை

நாட்டின் எதிர்காலத் தலைவர்களாகத் திகழும் பிள்ளைகளின் தலைமுறையினர் ஆட்சிக் கட்டமைப்பைப் பற்றி முழுமையான அறிவைப் பெற்றிருக்க வேண்டியதன் அவசியத்தையும் அதிபர் விளக்கினார்.

கடவட மஹாமாயா பெண்கள் பாடசாலையின் அதிபர் டபிள்யூ.ஆர்.திருமதி பிரியதர்ஷனி தனது பாடசாலையின் சிறார்களுக்கு கிடைத்த இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பு குறித்து அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு நன்றி தெரிவித்தார்.  
 

Leave a Reply