• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் வீடொன்று கொள்ளையிடப்பட்ட திக் நிமிடங்கள்…

கனடா

கனடாவில் வீடொன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவமொன்று காணொளியாக பதிவாகியுள்ளது.

ரொறன்ரோவின் யோக் பிராந்தியத்தில் அமைந்துள்ள வீடொன்றில் இந்தக் கொள்ளைச் சம்பவம் பதிவாகியுள்ளது.

காதலர் தினமன்று முகமூடி அணிந்த கும்பலொன்று வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளது.

கையில் ஆயுதங்களுடன் வீட்டை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்து கொள்ளையிடப்பட்டுள்ளது.

இந்த வீட்டிலிருந்த பல்வேறு பெறுமதிவாய்ந்த பொருட்கள் கொள்ளையிடப்பட்டதாகவும், வீட்டிலிருந்தவர்களை பணம் கேட்டு மிரட்டியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வீட்டில் இருந்தவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி கொள்ளையிடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தில், வீட்டில் இருந்த ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். 

இந்த கொள்ளையுடன் தொடர்புடையவர்கள் பற்றிய விபரங்கள் எதுவும் இருந்தால் உடனடியாக அறிவிக்குமாறு பொலிஸார்  பொது மக்களிடம் கோரியுள்ளனர்.
 

Leave a Reply