• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விஜயகாந்த் வேறலெவல் வில்லனாக நடித்த படங்கள்.. ஏழாம் அறிவு டாங்லீக்கே முன்னோடி கேப்டன்தானாம்!

சினிமா

கேப்டன் விஜயகாந்த் ஹீரோவாக நடித்த படங்கள் தான் எல்லோருக்கும் தெரியும். ஆனா அவர் வில்லனா நடித்த படங்கள் பலருக்கும் தெரியாது. என்னென்ன படங்கள்னு பார்ப்போமா…
இனிக்கும் இளமை
இதுதான் விஜயகாந்த் முதல்ல நடிச்ச படம். 1979ல் வெளியானது. இதுல விஜயகாந்த் வில்லனா நடிச்சிருக்கார். எம்.ஏ.காஜா இயக்கிய இந்தப் படத்தில் அருண் என்ற கதாபாத்திரத்தில் விஜயகாந்த் வில்லனாக நடித்துள்ளார். சுதாகர், ராதிகா, வி.கே.ராமசாமி, காந்திமதி உள்பட பலர் நடித்துள்ளனர். சங்கர் கணேஷ் இசை அமைத்துள்ளார்.
சாமந்திப்பூ

இது விஜயகாந்த் வில்லனாக நடித்த 2வது படம். 80ல் வெளியானது. சிவகுமார், ஷோபா நடித்துள்ளனர். இதுல விஜயகாந்த் பணக்கார வீட்டுப்பிள்ளையாக நடித்துள்ளார். அவர் ஷோபா மேல ஆசைப்படுகிறார். இதுல ஒரு பிளேபாய் ரோலில் தான் நடித்துள்ளார். சில காட்சிகளில் தான் வருகிறாராம். அவரது கேரக்டர் பெயர் பிரகாஷ்.
நூலறுந்த பட்டம்
கமலின் சிகப்பு ரோஜாக்கள் மாதிரி கேப்டன் நெகடிவ் ஷேடில் நடித்த படம். 1981ல் வெளியானது. இதுல ஹீரோவும் இவர் தான். இதுல விஜயகாந்த் வந்து வாழ்க்கையில எந்த ஒரு பிடிப்பும் இல்லாமல் இருக்கிறார். இதுக்கான காரணம் என்னன்னா அவர் சின்ன வயதில் பண்ணையார் மகனா வர்றாரு. அவர் ஹீரோயினையே ஏமாற்றிக் கெடுத்து விடும் கேரக்டர் தான் விஜயகாந்த்.
ஓம் சக்தி
விஜயகாந்த்தை வேற லெவல் வில்லனாகக் காட்டிய படம். 1982ல் வெளியானது. இதுல அவர் கலக்கல் வில்லன். ஆனா அவரு தான் ஹீரோ. அதான் ஆன்ட்டி ஹீரோ. இதுல அவரோட பொம்பள ஷோக்கு கேரக்டர் பொளந்து கட்டும்.
தீர்ப்பு என் கையில்
84ல் வெளியானது. இந்தப் படத்தில் நிறைய கொலைகள், திருட்டு என விஜயகாந்த் செய்வார். கடைசியில் ஜெயிலுக்கு வந்து திருந்தும் நேரத்தில் இறந்து விடுகிறார். இதுலயும் விஜயகாந்த் தான் ஹீரோ.
ராமன் ஸ்ரீராமன்
85ல் வெளியானது. இதுல விஜயகாந்த் இரட்டை வேடம். ஆள்மாறாட்டம், பெண்களை ஏமாற்றுதல்னு வில்லனாக அட்டகாசம் செய்கிறார் விஜயகாந்த். ஒருவர் நல்லவர். ஒருவர் கெட்டவர்.
பார்வையின் மறுபக்கம்
இதே போல பார்வையின் மறுபக்கம், சட்டம் ஒரு இருட்டறை படங்களில் பழிவாங்குகிறார். அதே போல காலையும் நீயே மாலையும் நீயே படமும் பழிவாங்குவது தான். தர்மம் வெல்லும் படங்களிலும் பழிவாங்குவது தான் கதை. இவற்றில் பார்வையின் மறுபக்கம் படத்தில் ஹிப்னாடிசம் பண்ணுவது போன்ற ஒரு கேரக்டரில் வருகிறார் கேப்டன். இதைப் பார்த்தால் ஏழாம் அறிவு டாங்லீக்கே முன்னோடியாக விஜயகாந்த் நடித்துள்ளாரே என வியக்க தோன்றும்.

தமிழச்சி கயல்விழி


 

Leave a Reply